மாமல்லபுரம் கடலில் மூழ்கியவர் உடல் கரை ஒதுங்கியது: மீனவர்கள் உதவியுடன் மற்றொருவரை தேடும் பணி தீவிரம்

மாமல்லபுரம் கடலில் மூழ்கியவர் உடல் கரை ஒதுங்கியது: மீனவர்கள் உதவியுடன் மற்றொருவரை தேடும் பணி தீவிரம்
Updated on
1 min read

மாமல்லபுரம்: மாமல்லபுரம் கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. நேற்று அமாவாசை தினம் என்பதால் கடல் வழக்கத்துக்கு மாறாக பலத்த சீற்றத்துடன் காணப்பட்டது. இதில் ஆந்திரா மாநிலம், விஜயவாடாவைச் சேர்ந்தவர் தோட்டாபவன் கல்யாண் (24). மகேந்திர சிட்டியில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவர் தனது நண்பர்களுடன் நேற்று முன்தினம் மாமல்லபுரத்துக்கு வந்து கடற்கரையில் குளித்தார். அப்போது ராட்சத அலையில் சிக்கி கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டார்.

அதேபோல் திருக்கழுக்குன்றம் அடுத்த கடம்பாடி கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் (19), இவர் செங்கல்பட்டில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் பட்டப்படிப்பு முதலாம் ஆண்டு படித்து வந்தார். நண்பர்களுடன் நேற்று மாமல்லபுரம் வந்த அவர் கடலில் குளிக்கும்போது அலையில் சிக்கி மாயமானார்.

இந்நிலையில், நேற்று அதிகாலை பட்டிபுலம் கடற்கரையில் ரமேஷ் உடல்ஒதுங்கியது. இதனை தொடர்ந்து மாமல்லபுரம் போலீஸார் தீயணைப்பு துறையினர் மற்றும் மீனவர்கள் உதவியுடன் கடலில் அடித்து செல்லப்பட்ட தோட்டாபவன் கல்யாணை படகு மூலம் தீவிரமாக தேடி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in