Published : 31 May 2022 07:02 AM
Last Updated : 31 May 2022 07:02 AM

பாமக மத்திய அமைச்சரவையில் இருந்தபோது கொண்டு வந்த பல ரயில்வே திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டு விட்டன: பாமக தலைவர் அன்புமணி குற்றச்சாட்டு

மாமல்லபுரத்தில் உள்ள மாமல்லன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ். அருகில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் திருக்கச்சூர் கி.ஆறுமுகம்.

மாமல்லபுரம்: சென்னை - புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலை ரயில்வே திட்டம் உள்ளிட்ட பல்வேறு ரயில்வே திட்டங்கள் பாமகசார்பில் மத்திய ரயில்வே அமைச்சர்களாக இருந்தபோது கொண்டு வந்த பல ரயில்வே திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டு விட்டன என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டினார்.

மாமல்லபுரத்தை அடுத்த தேவனேரியில் கட்சி கொடியேற்றி வைத்தார். பின்னர் மாமல்லன் சிலைக்கு மாலைஅணிவித்தார். பின்னர் அன்புமணிபேசும்போது, ‘‘ஏ.கே.மூர்த்தி, அரங்க.வேலு ஆகியோர் ரயில்வே அமைச்சர்களாக இருந்தபோது மொரப்பூர்- தர்மபுரி, திண்டிவனம் - நகரி, மாமல்லபுரம் வழியாக சென்னை - புதுச்சேரி, கூடுவாஞ்சேரி - பெரும்புதூர் உள்ளிட்ட ரயில்வே திட்டங்கள் உள்ளிட்ட எண்ணற்ற ரயில்வே திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டது" என்றார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, ‘‘கல்பாக்கம் அணுமின் நிலையத்தின் அணுகசிவால் புற்றுநோய் உள்ளிட்ட பாதிப்புக்கு ஏற்படுகின்றன. இதற்கு விஞ்ஞான ரீதியில்அரசு உடனடியாக ஆய்வு நடத்த வேண்டும். அணுமின் நிலையத்தால் கொண்டு வரப்பட்டுள்ள நிலா கமிட்டியை ரத்து செய்ய வேண்டும். நேர்முகத் தேர்வில் இந்தியை திணிக்கக் கூடாது’’ என்றார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் ஏ.கே.மூர்த்தி, முன்னாள் எம்எல்ஏ திருக்கச்சூர் கி.ஆறுமுகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x