தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் ஒரே மாதத்தில் 142 பேர் பாதிப்பு

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் ஒரே மாதத்தில் 142 பேர் பாதிப்பு
Updated on
1 min read

தமிழகத்தில் ஒரே மாதத்தில் 142 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப் பதாக மத்திய சுகாதாரத்துறை தெரி வித்து உள்ளது.

தமிழகம் கடந்த ஆண்டு டெங்கு காய்ச்சலின் பிடியில் சிக்கித் தவித்தது. கடந்த ஆண்டில் மட்டும் 4,500-க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானோர் டெங்குவின் தீவிரத்தால் உயிரிழந்தனர். கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டின் தொடக்கத்திலும் டெங்கு தீவிரம் காட்டத் தொடங்கியது. கடந்த ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 மாதத்தில் 894 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் 142 பேர் டெங்கு பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். டெங்குவால் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் கடந்த 4 மாதத்தில் காய்ச்ச லால் பாதிக்கப்பட்ட 19 லட்சத்து 99 ஆயி ரத்து 335 பேரை பரிசோதனை செய்ததில் 540 பேர் மலேரியாவால் பாதிக்கப்பட் டுள்ளனர். சிக்குன் குனியாவால் கடந்த 4 மாதத்தில் 22 பேர் பாதிப்படைந்துள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித் துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in