ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தில் ரூ.2 ஆயிரம் கோடி கொள்ளை: அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு

ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தில் ரூ.2 ஆயிரம் கோடி கொள்ளை: அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு
Updated on
1 min read

ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தில் ரூ.2 ஆயிரம் கோடி கொள்ளையடியடித்துள்ளனர் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

குடியாத்தம் தனித் தொகுதி பாமக வேட்பாளர் தீபா, கே.வி.குப்பம் தனித் தொகுதி வேட்பாளர் குசலகுமாரியை ஆதரித்து அன்புமணி ராமதாஸ் நேற்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார். கே.வி.குப்பத்தில் அவர் பேசும்போது, ‘‘சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகள் ஆகியும் மக்களின் குடிநீர் தேவையைக் கூட பூர்த்தி செய்ய முடியாத நிலை இருக்கின்றன. தொடர்ந்து 50 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த அதிமுக, திமுக கட்சிகளால் இதை முழுமையாக நிறைவேற்ற முடியவில்லை.

ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் என்ற பெயரில் ரூ.2 ஆயிரம் கோடி கொள்ளையடித்ததைத் தவிர, குறைந்தபட்சம் ஒகேனக்கல் சுற்றியுள்ள பகுதியின் குடிநீர் தேவையைக் கூட பூர்த்தி செய்ய முடியவில்லை. அடுக்கு மொழியில் வசனம் பேசி, மக்களை ஏமாற்றிய கட்சிகளை வீட்டுக்கு அனுப்பி மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும்.

தேர்தல் அறிக்கை என்ற பெயரில் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தாத திட்டங்களை இலவசம் என்ற பெயரில் மக்களின் மீது ஜெயலலிதா திணித்து வருகிறார். தமிழக அரசு கடன் சுமையில் தத்தளிக்கும்போது நடைமுறைக்கு சாத்தியமில்லாத அறிவிப்புகள் மக்களை ஏமாற்றும் செயல்’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in