Published : 07 May 2016 08:51 am

Updated : 07 May 2016 08:52 am

 

Published : 07 May 2016 08:51 AM
Last Updated : 07 May 2016 08:52 AM

பிரச்சாரத்துக்காக சரக்கு வாகனங்களில் மக்களை ஏற்றிச் சென்றால் நடவடிக்கை எடுக்க வேண்டும்: தேர்தல் ஆணையத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

திண்டுக்கல் மாவட்டம், நிலக் கோட்டையைச் சேர்ந்த எம்.எஸ். பாலன் என்பவர் உயர் நீதிமன்றத் தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:

மோட்டார் வாகனச் சட்டத்தை மீறி தேர்தல் பிரச்சாரத்தின்போது மக்களை ஏற்றிச் செல்ல சரக்கு வாகனங்களை வேட்பாளர்கள் பயன்படுத்துகின்றனர். இந்த விதி மீறல்கள் குறித்து ஏப்ரல் 28-ம் தேதி அதிகாரிகளிடம் மனு அளித்தேன். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, தேர்தல் பிரச்சாரத்துக்காக சரக்கு வாகனங்களில் மக்களை ஏற்றிச் செல்ல அனுமதிக்கூடாது என தேர் தல் ஆணையம், போக்குவரத்துத் துறையினர் மற்றும் போலீஸாருக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் கே.கே.சசிதரன், எஸ்.விமலா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசா ரணைக்கு வந்தது. அப்போது, தேர் தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நிரஞ்சன் ராஜகோபா லன், லாரி உள்ளிட்ட சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றிச் செல்வதை தடுக்குமாறு தமிழக தலைமைச் செயலருக்கு தேர்தல் ஆணையம் கடந்த ஏப்ரல் 30-ம் தேதி உத்தரவிட்டுள்ளது என்றார்.

அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன், தேர்தல் பிரச்சாரத்தில் சரக்கு வாகனங் களை பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக் கும், போக்குவரத்துத் துறை முதன்மைச் செயலர் கடந்த மே 2-ம் தேதி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். இதுதொடர்பாக, அதிகாரிகளும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர் என்று தெரிவித்தார்.

இதையடுத்து நீதிபதிகள் “சரக்கு வாகனங்களில் மக்களை ஏற்றிச் செல்லும்போது விபத்து ஏற்பட்டால், விபத்தில் பாதிக்கப்படுவோருக்கு இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இழப் பீடு வழங்காது என்பதை வாகன உரிமையாளர்கள் உணர வேண்டும். மோட்டார் வாகன சட்ட விதிகளை அமல்படுத்த அதிகாரிகள் உறுதி யான நடவடிக்கை எடுக்க வேண்டும். சரக்கு வாகனங்கள் தேர்தல் பிரச் சாரத்துக்காக பயன்படுத்தப்பட்டால் அது குறித்து மனுதாரர் தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவிக் கலாம். அவ்வாறு புகார் அளிக்கப்பட் டால், தேர்தல் அதிகாரிகள், போலீ ஸார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று உத்தரவிட்டனர்.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை


சரக்கு வாகனங்கள்மக்களை ஏற்றிச் செல்வதுநடவடிக்கை எடுக்க வேண்டும்தேர்தல் ஆணையம்உயர்நீதிமன்றம் உத்தரவு

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author