மழைநீரில் அடித்துச் செல்லப்பட்ட சிறுமியின் கதி என்ன?: வேலூரில் 2-வது நாளாக நடந்த மீட்பு பணியில் சிக்கல்

மழைநீரில் அடித்துச் செல்லப்பட்ட சிறுமியின் கதி என்ன?: வேலூரில் 2-வது நாளாக நடந்த மீட்பு பணியில் சிக்கல்
Updated on
2 min read

வேலூரில் பிறந்த நாளன்று கழிவு நீர் கால்வாயில் இழுத்துச் செல் லப்பட்ட ஜார்கண்ட் மாநில சிறுமி யின் கதி என்ன ஆனது என்பது தெரியவில்லை. கால்வாய்களை ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டி யுள்ளதால் 2-வது நாளாக நடந்த மீட்பு பணியில் சிக்கல் ஏற்பட்டுள் ளது.

ஜார்கண்ட் மாநிலம் கிரீதி மாவட் டத்தைச் சேர்ந்தவர் இந்திரஜித் முகர்ஜி. இவரது இளைய மகள் நேகா (8) என்பவரின் மருத் துவ சிகிச்சைக்காக குடும்பத்தின ருடன் வேலூரில் உள்ள லாட் ஜில் தங்கியுள்ளனர். இந்திரஜித் தின் மூத்த மகள் பிரியங்கா (14). இவருக்கு திங்கள் கிழமை பிறந்த நாள். இதனால், குடும்பத்தினருடன் ஜலகண்டேஸ் வரர் கோயிலுக்கு சென்றார். இரவு 7 மணியளவில் அறைக்கு திரும்பி யுள்ளார்.

பேரி சுப்பிரமணிய சுவாமி கோயில் தெருவில் இவர்கள் வந்து கொண்டிருந்தனர். பலத்த மழை காரணமாக அந்த தெருவில் தேங்கிய வெள்ள நீரில் நடந்துவந்தனர். அப்போது, கழிவு நீர் கால்வாய் இருப்பது தெரியாமல் அதில் குடும்பத் துடன் இந்திரஜித் விழுந்துவிட்டார். அருகில் இருந்தவர்கள் இந்தி ரஜித், அவரது மனைவியை மீட்ட னர். அதற்குள் இந்திரஜித்தின் மூத்த மகள் பிரியங்கா, கால்வாய் தண்ணீரில் மூழ்கி அடித்துச் செல்லப்பட்டார்.

அதிர்ச்சியில் உறைந்த குடும் பத்தினர் மகளை காப்பாற்றும் படி கூச்சலிட்டுள்ளனர். பொது மக்கள் சிறுமியை மீட்கும் முயற்சி யில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து, விரைந்து வந்த மாநக ராட்சி அதிகாரிகள் ஜேசிபி இயந்தி ரங்கள் உதவியுடன் கால்வாய் மீது போடப்பட்டிருந்த சிமெண்ட் சிலாப்புகளை உடைத்து எடுத்தனர்.

நீண்ட நேரமாகியும் சிறுமியை மீட்க முடியாததால் அவ ரது கதி என்ன ஆனது என்பது தெரியவில்லை. இந்த தகவலால் மாவட்ட ஆட்சி யர் நந்தகோபால், காவல் கண் காணிப்பாளர் விஜயகுமார், மேயர் கார்த்தியாயினி ஆகியோர் நேரில் வந்து மீட்பு பணியை துரிதப் படுத்தினர்.

தேடுதல் பணியில் 150 பேர்

சிறுமி பிரியங்காவின் சட லத்தை மீட்கும் முயற்சியில் தீய ணைப்பு வீரர்கள் 40 பேர், மாநக ராட்சி ஊழியர்கள், போலீஸார் மற்றும் பொதுமக்கள் 150-க்கும் மேற்பட்டவர்கள் ஈடுபடுத்தப் பட்டனர். மழையையும் பொருட் படுத்தாமல் திங்கள்கிழமை இரவு 8 மணிக்கு தொடங்கிய தேடுதல் பணி, 2-வது நாளாக செவ் வாய்க்கிழமையும் தொடர்ந்தது. பேரி சுப்பிரமணிய சுவாமி கோயில் தெருவில் தொடங்கி சத்து வாச்சாரி வரை செல்லும் கழிவு நீர் கால்வாய் முழுவதும் தேங்கியி ருந்த குப்பைகள் அனைத்தையும் அகற்றியும் சிறுமியை கண்டு பிடிக்க முடியவில்லை.

இதனால், மாநகராட்சி அதிகாரி கள் உதவியுடன் கால்வாயின் அமைப்பு குறித்த வரைபடத்தை ஆய்வு செய்தனர். அதில், பேலஸ் கபே சந்திப்பில் இருந்து சிஎம்சி மருத்துவமனை வளாகத்தில் உள்ள கேன்டீன் கட்டிட பகுதிக்கு அடியில் உள்ள கால்வாய் பகுதியில் தேடுல் பணி தொடர முடிவானது. இதனால், அந்த கட்டிடம் செவ்வாய்க்கிழமை காலை இடிக்கப்பட்டது.

இதற்கிடையே போதிய திட்டங் கள் இல்லாததால் மீட்பு பணியில் தாமதம் ஏற்படுகிறது எனக்கூறி பொதுமக்கள் மற்றும் சிறுமியின் உறவினர்கள் சிலர் ஆற்காடு சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட குவிந்தனர். இதுகுறித்த தகவல் கிடைத்ததும் வடக்கு காவல் நிலைய போலீஸார் விரைந்து சென்று அவர்களை சமாதானப்படுத்தினர்.

ஆக்கிரமிப்புகள்

மீட்பு பணி குறித்து ஆட்சியர் நந்தகோபால் கூறுகையில், “சிறு மியை மீட்க பெரும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். நாங்கள் சந்தேகிக்கும் பகுதியில் சுமார் 12 அடி ஆழத்துக்கு சகதி உள்ளது. அங்குள்ள கழிவு நீரை முழுமை யாக அகற்றி, தேட முடிவு செய் துள்ளோம். இந்த கால்வாய் மீது உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற மாநகராட்சிக்கு உத்தர விடப்பட்டுள்ளது. விரைவில் அந்த பணி தொடங்கும்’’ என்றார். 22 மணி நேரத்தை கடந்து சிறுமி பிரியங்காவை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறதுர.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in