Published : 11 May 2016 02:17 PM
Last Updated : 11 May 2016 02:17 PM

210 தொகுதிகளில் பாமக வெற்றி பெறும்: பரமத்தி வேலூரில் ராமதாஸ் நம்பிக்கை

‘இன்றைய நிலவரப்படி 210 தொகுதிகளில் பாமக வெற்றி பெறும். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளிலும் பாமக வெற்றி பெறும்’, என, பாமக நிறுவனர் ராமதாஸ் பேசினார்.

பரமத்தி வேலூரில் கடந்த 9-ம் தேதி இரவு பாமக வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவை தொகுதிகளில் பாமக சார்பில் போட்டியிடும் வேட் பாளர்களை அறிமுகம் செய்து வைத்து பேசியது:

நாமக்கல் மாவட்டத்துக்கு பல்வேறு சிறப்புகள் உண்டு. இதை கல்வி மாவட்டம் என்றும் சொல்வர். லாரி பாடி கட்டுதல், கோழிப்பண்ணைத் தொழிலுக்கும் புகழ் பெற்ற மாவட்டம். இந்த மாவட்டத்திலுள்ள 6 தொகுதிகள் மட்டுமல்ல 234 தொகுதிகளிலும் அன்புமணி ராமதாஸ் போட்டி யிடுகிறார் என நினைத்து தமிழகத் தில் உள்ள ஒட்டுமொத்த பெண் களும் அன்புமணி ராமதாஸூக்கு ஓட்டுப் போட முடிவு செய்துள்ளனர்.

நாங்கள் சொல்வதெல்லாம் அப்படியே காப்பி எடுத்தது போல, பாமக தேர்தல் அறிக்கையில் இருந்து திமுகவினர் 42 பொருள் காப்பியடித்துள்ளனர். அதிமுக 29 பொருள் காப்பியடித்துள்ளனர். அவர்களிடம் அறிவுப் பஞ்சம் உள்ளது. பாமக 8 மாதத்துக்கு முன் தேர்தல் அறிக்கை வெளியிட்டது. இந்தியாவில் எந்த ஒரு கட்சியும் 8 மாதத்துக்கு முன் தேர்தல் அறிக்கை வெளியிட்டது கிடையாது. அன்புமணி ராமதாஸால்தான் வளர்ச்சியை கொடுக்க முடியும்.

தமிழகத்தில் உள்ள 30, 35 வயதுக்கு கீழ் மற்றும் 18 வயதுக்கு மேல் உள்ள இளைஞர்கள், ஒரு நல்ல முதல்வர் நாட்டுக்கு வேண்டும் என்ற முடிவுக்கு வந்துள்ளனர். இவர்கள் இரண்டு பேரும் (திமுக, அதிமுக) தேவையில்லை என, முடிவு செய் துள்ளனர். இளைஞர்கள் மத்தியில் அன்புமணி இடம் பிடித்துவிட்டார்.

பாமக ஆட்சிக்கு வந்தவுடன், கள்ளச்சாராயம் விற்பனை செய்தால், அந்தப் பகுதி போலீஸ் காவல் உதவி ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்படுவர். ஊராட்சி மன்றத் தலைவர் பதவி பறிக்கப்படும். பல எதிர்ப்புக்கு பின் புகையிலையை அன்புமணி ராமதாஸ் மத்திய அமைச்சராக இருந்தபோது தடை செய்தார். அதை கருணாநிதி முதலமைச் சாராக இருந்தபோது எதிர்த்தார்.

பொது இடத்தில் புகைப்பிடித் தால் தண்டனைக்குரிய குற்றம் எனும் சட்டத்தை கொண்டு வந்தவர், அன்புமணி ராமதாஸ். அவர் மத்திய அமைச்சராக இருந்தபோது அவருக்கு 36 வயது தான். மொத்தம் 125 நாடுகளுடைய சுகாதாரத் துறை அமைச்சர்கள் ஒரு இடத்தில் கூடி, அந்தந்த நாட்டில் உள்ள சுகாதாரப் பிரச்சினை குறித்து பேசுவர். 5 ஆண்டு ஆட்சி செய்ய வாய்ப்பு கொடுத்தால் 50 ஆண்டுக்கு தேவையான திட்டங் களை நான் செய்கிறேன் என அன்புமணி சொல்கிறார். இந்த தொலைநோக்குப் பார்வை இந்தியாவில் உள்ள எந்த தலை வருக்கும் கிடையாது. அன்புமணிக் குத் தான் உள்ளது.

இன்றைய நிலவரப்படி 210 தொகுதிகளில் பாமக வெற்றி பெறும். இந்த மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளில் பாமக வெற்றி பெறும்’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x