Published : 30 May 2022 06:35 AM
Last Updated : 30 May 2022 06:35 AM

சென்னையில் கடந்த 3 ஆண்டுகளில் ரயில்களில் விதிமீறி பயணித்த 2,219 பேர் மீது வழக்கு பதிவு: ரூ.8.81 லட்சம் அபராதம் வசூல்

சென்னை: சென்னை ரயில்வே கோட்டத்தில், ரயில் படிக்கட்டில் தொங்கியபடி பயணித்தது தொடர்பாக கடந்த 3 ஆண்டுகளில் 2,219 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, ரூ.8.81 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு, வேளச்சேரி மற்றும் சென்ட்ரலில் இருந்து அரக்கோணம், கும்மிடிப்பூண்டி ஆகிய வழித் தடங்களில் தினமும் 700-க்கும் மேற்பட்ட மின்சார ரயில் சேவைகள் இயக்கப்படுகின்றன. இவற்றில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பயணிக்கின்றனர்.

பயணிகளில் சிலர், விதிகளை மீறி, ரயில் படிக்கட்டில் தொங்கியபடி பயணிப்பது, செல்போனில் பேசியபடி தண்டவாளத்தை கடப்பது, இன்ஜின் முன்பு நின்று செல்ஃபி எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இவ்வாறு விதிமீறல்களில் ஈடுபடும் நபர்கள் மீது ரயில்வே பாதுகாப்பு படை போலீஸார் வழக்கு பதிவு செய்து வருகின்றனர்.

சென்னை ரயில்வே கோட்டத்தில் ரயில் படிக்கட்டில் தொங்கியபடி பயணித்தது தொடர்பாக, கடந்த 2020, 2021 மற்றும் 2022 ஏப்ரல் வரை 2,219 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, மொத்தம் ரூ.8.81 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x