Published : 29 May 2016 02:20 PM
Last Updated : 29 May 2016 02:20 PM

பாலிடெக்னிக் வாரியத் தேர்வில் மாநில அளவில் குரு ராகவேந்திரா கல்லூரி மாணவர் முதலிடம்

வேப்பூர் குருராகவேந்திரா பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் ஆர்.காமேஷ் பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கான அரசு வாரிய பொதுத் தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.

குடியாத்தம் அடுத்துள்ள வேப்பூரில் குரு ராகவேந்திரா பாலிடெக்னிக் கல்லூரி இயங்கிவருகிறது. இந்த கல்லூரியில் எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பிரிவு மூன்றாம் ஆண்டு மாணவர் ஆர்.காமேஷ் அரசு வாரிய பொதுத் தேர்வில் 700-க்கு 700 மதிப்பெண் பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.

கடந்த 2012-13-ம் கல்வியாண்டில் 600-க்கு 599 மதிப்பெண் பெற்று சிவில் மாணவர் அவினாஷ் மாநில அளவில் முதலிடம் பிடித்தார். அதேபோல, 2013-14-ம் கல்வியாண்டில் எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பிரிவு மாணவி எல்.மகேஸ்வரி 700-க்கு 699 மதிப்பெண் பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்தனர். தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக இக்கல்லூரி மாணவர்கள் மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், கம்ப்யூட்டர் பிரிவு மாணவி எஸ்.பிரீத்தி 700-க்கு 698 மதிப்பெண் இரண்டாமிடத்தைப் பிடித்தார். மெக்கானிக்கல் பிரிவு மாணவர் ஏ.எம்.சஞ்சய்குமார் 700-க்கு 696 மதிப்பெண் பெற்று மூன்றாமிடம் பிடித்தார்.

மூன்றாம் ஆண்டுக்கான அரசு வாரியத் தேர்வில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் 94 சதவீதம், எலக்ட்ரிக்கல் பிரிவு 91 சதவீதம், எலக்ட்ரானிக்ஸ் பிரிவு 91 சதவீதம், மெக்கானிக்கல் பிரிவு 85 சதவீதம், சிவில் பிரிவு மாணவர்கள் 65 சதவீதம் தேர்ச்சி பெற்றனர்.

தேர்வில் சாதனை படைத்த மாணவர்களை கல்லூரித் தலைவர் ஜி.எத்திராஜன், அறங்காவலர் குழுத் தலைவர் எஸ்.குமார், செயலாளர் எம்.பிரகாசம், பொருளாளர் ஆர்.சுரேஷ்மணி, அறங்காவலர்கள் கே.சேகர், சி.செல்வம், கே.எஸ்.பாபு, எம்.என்.பரந்தாமன், ஜே.ரமணகுமார், வி.ராமு, எம்.என்.கார்த்திகேயன், கல்லூரி முதல்வர் எஸ்.முருகதாஸ் மற்றும் துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், அலுவலர்கள் பாராட்டினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x