வாணியம்பாடி அருகே விபத்தில் சிக்கிய இளைஞர்கள்: அமைச்சர் எ.வ.வேலு மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினார்

வாணியம்பாடி அடுத்த வேப்பம்பட்டு பகுதியில் விபத்தில் சிக்கிய இளைஞர் களை அமைச்சர் எ.வ.வேலு மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினார். உள்படம்: உயிரிழந்த இஸ்மாயில்.
வாணியம்பாடி அடுத்த வேப்பம்பட்டு பகுதியில் விபத்தில் சிக்கிய இளைஞர் களை அமைச்சர் எ.வ.வேலு மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினார். உள்படம்: உயிரிழந்த இஸ்மாயில்.
Updated on
1 min read

வாணியம்பாடி: வாணியம்பாடி அருகே இரு சக்கர வாகனத்தில் சென்ற இளை ஞர்கள் விபத்தில் சிக்கினர். அப்போது, அவ் வழியாக வந்த பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

வேலூர் மாவட்டம் பேரணாம் பட்டு பகுதியைச் சேர்ந்தவர் இஸ்மாயில் (21). இவர், அதே பகுதியில் உள்ள கல்லூரியில் இளங்கலை 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில், இவரது நெருங்கிய நண்பரான அஜ்மல் (21) என்பவருடன் இரு சக்கர வாகனத்தில் ஏலகிரி மலைக்கு சுற்றுலா சென்றார்.

இரு சக்கர வாகனத்தை இஸ்மாயில் ஓட்டிச்சென்றார். வாணியம்பாடி அடுத்த வேப்பம் பட்டு பகுதியில் சென்றபோது அங்கு சாலை விரிவாக்க பணிக்காக ஒருவழிப்பாதையில் போக்குவரத்து திருப்பி விடப்பட் டிருந்தது. இதனால், ஒரு வழிப்பாதையில் இஸ்மாயில் சென்றபோது முன்னால் சென்ற கனரக வாகனத்தை முந்திச்செல்ல முயன்றார்.

அப்போது, எதிரே வந்த வாகனம் மீது இஸ்மாயில் ஓட்டிச்சென்ற இரு சக்கர வாகனம் நேருக்கு நேர் மோதியது. இதில், இஸ்மாயில், அஜ்மல் ஆகிய 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். விபத்தை கண்டதும், பொதுமக்கள் அங்கு திரண்டனர். அந்த நேரத்தில் ஜோலார்பேட்டையில் இருந்து வாணியம்பாடிக்கு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, சட்டப்பேரவை உறுப் பினர்கள் தேவராஜ் (ஜோலார்பேட்டை), நல்லதம்பி (திருப் பத்தூர்), வில்வநாதன் (ஆம்பூர்) உள்ளிட்ட பலர் வந்துக்கொண் டிருந்தனர்.

விபத்தில் இளைஞர்கள் சிக்கியதை அறிந்த அமைச்சர் எ.வ.வேலு உடனடியாக தனது காரில் இருந்து கீழே இறங்கி, 108 ஆம்புலன்ஸை வரவழைத்தார். விபத்தில் காயமடைந்து உயிருக்கு போராடிய 2 இளைஞர்களை மீட்ட அமைச்சர் எ.வ.வேலு அவர்களை வாணியம்பாடி அரசு மருத் துவமனைக்கு அனுப்பி வைத்தார்.ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே இஸ்மாயில் பரிதாபமாக உயிரிழந்தார். அஜ்மல் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

இது குறித்து வாணியம்பாடி கிராமிய காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in