

திருவண்ணாமலை: ஆரணியில் அரசுப் பேருந்தில் பயணி தவறவிட்ட தங்க செயினை மீட்டு ஒப்படைத்த தொழிலாளியை காவல் துணை கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் பாராட்டினார்.
தி.மலை மாவட்டம் பெரணமல்லூரில் வசிப்பவர் தொழிலாளி சம்பத்(60). இவர், ஆரணிக்கு அரசுப் பேருந்தில் வந்துள்ளார். பேருந்து நிலையத்தில் அரசுப் பேருந்து நிறுத்தப்பட்டதும் சம்பத் உள்ளிட்ட பயணிகள் கீழே இறங்கினர்.
அப்போது, பேருந்தில் தங்க செயின் கீழே கிடந்தது. அந்தசெயினை எடுத்து தவற விட்டவர்கள் குறித்து கேட்டறிந்தார். ஆனால், தங்க செயினுக்கு யாரும் உரிமை கோரவில்லை.
இதையடுத்து, ஆரணி உட்கோட்ட காவல் துணைகண்காணிப்பாளர் அலுவலகத் துக்கு சென்ற சம்பத், அங்கிருந்த டிஎஸ்பி ரவிச்சந்திரனிடம் தங்க செயினை ஒப்படைத்தார். தங்க செயினை பெற்று கொண்ட அவர், தொழிலாளி சம்பத்தின் நேர்மையை பாராட்டினார்.
பின்னர், நகர காவல் உதவி ஆய்வாளர் சுந்தரேசனிடம் தங்க செயினை கொடுத்து உரிய விசாரணை நடத்தி, உரியவரிடம் ஒப் படைக்குமாறு உத்தரவிட்டார்.
பேருந்தில் தங்க செயின் கீழே கிடந்தது. அந்தசெயினை எடுத்து தவற விட்டவர்கள் குறித்து கேட்டறிந்தார். ஆனால், தங்க செயினுக்கு யாரும் உரிமை கோரவில்லை.