12 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: தமிழக அரசு

12 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: தமிழக அரசு
Updated on
1 min read

சென்னை: 12 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலாளராக கார்த்திகேயன் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சித்துறையின் கூடுதல் செயலாளராக விஜயலட்சுமி, கூட்டுறவு சங்கங்கங்களின் கூடுதல் பதிவாளராக சங்கர் நிமிக்கப்பட்டுள்ளனர்.

சமூக நலன், மகளிர் உரிமைத்துறை கூடுதல் இயக்குநராக கார்த்திகா, சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய நிர்வாக இயக்குநராக ராஜகோபால் கங்கராவை நியமித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதேபோல், ஐஏஎஸ் அதிகாரிகள் சிம்ரன்ஜீத் சிங் கலான் மதுரை மாநகராட்சி ஆணையராகவும், பிரதாப் கோவை மாநகராட்சி ஆணையராகவும், வைத்தியநாதன் திருச்சி மாநகராட்சி ஆணையராகவும், தற்பகராஜ் ஆவடி மாநகராட்சி ஆணையராகவும், சிவகிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலி மாநகராட்சி ஆணையராகவும், ஆனந்த்மோகன் நாகர்கோவில் மாநகராட்சி ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in