கலைஞர் கலைத்துறை வித்தகர் விருது: இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் தலைமையில் குழு அமைத்து அரசாணை வெளியீடு

கலைஞர் கலைத்துறை வித்தகர் விருது: இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் தலைமையில் குழு அமைத்து அரசாணை வெளியீடு
Updated on
1 min read

சென்னை: தமிழ்த் திரையுலகில் சிறந்து விளங்கிய வாழ்நாள் சாதனையாளருக்கு முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரில் "கலைஞர் கலைத்துறை வித்தகர் விருது" வழங்கப்படும் என்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணை: தமிழ்த் திரையுலகில் சிறந்து விளங்கிய வாழ்நாள் சாதனையாளருக்கு, கலைஞர் கலைத்துறை வித்தகர் விருதை 2022 ஆம் ஆண்டு ஜூன் 3-ம் நாள் அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் வழங்க ஏதுவாக, விருதாளரை தேர்வு செய்ய திரைப்பட இயக்குநர் எஸ்.பி.முத்துராமனை தலைவராகவும், நடிகரும், நடிகர் சங்கத் தலைவருமான நாசர் மற்றும் நடிகரும், இயக்குநருமான கரு.பழனியப்பன் ஆகியோரை உறுப்பினர்களாகவும் கொண்ட தேர்வுக்குழுவினை அமைத்து ஆணையிடப்பட்டுள்ளது.

தேர்வுக்குழுவால் பரிந்துரைக்கப்படும் விருதாளருக்கு விருதுத் தொகையான ரூ.10 லட்சம் மற்றும் நினைவுப்பரிசு ஆகியவற்றினை முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த தினமான ஜூன் 3 ஆம் நாளன்று தமிழக முதல்வர் வழங்கி கவுரவிப்பார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in