

தேர்தலில் பணம் கொடுத்து வாக்காளர்களை ஏமாற்ற முடியாது என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பேசினார்.
ஆத்தூர் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் சூரியமூர்த்தியை ஆதரித்து ஆத்தூரில் அவர் பேசியதாவது:
வாக்களிப்பதற்காக மாற்றுக் கட்சியினர் பணம் கொடுத்தால், தேர்தல் அதிகாரிகளிடம் புகார் செய்யுங்கள். அப்படி புகார் செய்தாலும் அவர்களால் ஒன்றும் செய்ய இயலாது. அதிகாரம் இல்லாத அமைப்பாக தேர்தல் ஆணையம் உள்ளது. தேர்தலில் வாக்காளர்களை பணம் கொடுத்து ஏமாற்ற முடியாது.
நான் ஒரு திறந்த புத்தகம், என்னிடம் எப்போது வேண்டுமானாலும் சோதனை நடத்தி கொள்ளலாம். என்னிடம் ஒரு பைசா கூட எடுக்க முடியாது. ஏனென்றால், என்னிடம் பணம் கிடையாது. எங்கள் கூட்டணி வேட்பாளர்கள் பணம் தருவார்கள் என்று யாரும் எதிர்பார்க்க வேண்டாம்.
இவ்வாறு அவர் பேசினார்.