

சென்னை எழும்பூர் ரயில் நிலையம் அருகே காந்தி இர்வின் சாலையில் வசித்த பிரபல புற்று நோய் நிபுணர் ரோகிணி பிரேம் குமாரி(67) கடந்த 8-ம் தேதி தனது வீட்டிலேயே கொடூரமாக கொலை செய்யப்பட்டுக் கிடந் தார். கொலை குறித்து எழும் பூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கொலையாளி களை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஓட்டல் உரிமையாளர், கட்டிட கான்ட்ராக்டர் ஆகியோ ரிடம் முதல்கட்ட விசாரணை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதில் முக்கிய தகவல் கள் எதுவும் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. கொலை செய்யப்பட்ட ரோகி ணியின் மகள் ரேஷ்மி நந்திதா மற்றும் அவரது காதலரிடம் விசாரணை நடத்தப்பட்டதில், அவர்களுக்கும் கொலைக்கும் சம்பந்தம் இல்லை என்பது தெரியவந்தது.
சென்னை எழும்பூர் பாந் தியன் சாலையில் கோ-ஆப் டெக்ஸ் அருகே பாந்தியன் லேன் பகுதியில் பிரபல அடுக் கு மாடி குடியிருப்பில் கடந்த மார்ச் 4-ம் தேதி சாரதா (70) என்ற மூதாட்டி கொலை செய் யப்பட்டார். இவரும் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்தான். தற்போது கொலை செய்யப் பட்ட ரோகிணியும் கேரள மாநிலத்தை சேர்ந்தவர். இரு வரும் கொலை செய்யப்பட்ட விதம் ஒரே மாதிரி இருப்ப து போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. எனவே, இரு கொலைகளையும் ஒரே நபர் செய்திருக்கலாமோ என்ற சந்தேகம் போலீஸாருக்கு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வரு கிறது.