காவல்துறை சார்பில் போதை விழிப்புணர்வு, பெண்கள் பாதுகாப்புக்காக 2 விழிப்புணர்வு குறும்படங்கள் தூத்துக்குடியில் வெளியீடு

தூத்துக்குடி காமராஜ் கல்லூரி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் ‘போதை’, ‘காவல் நண்பன்’ ஆகிய 2 விழிப்புணர்வு குறும்படங்களை எஸ்.பி.பாலாஜி சரவணன் வெளியிட்டார்.
தூத்துக்குடி காமராஜ் கல்லூரி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் ‘போதை’, ‘காவல் நண்பன்’ ஆகிய 2 விழிப்புணர்வு குறும்படங்களை எஸ்.பி.பாலாஜி சரவணன் வெளியிட்டார்.
Updated on
1 min read

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்களிடையே கஞ்சா,மது மற்றும் புகையிலை பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்துவிழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் “போதை” என்ற குறும்படமும், பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் காவல்துறையினரின் காவல்செயலி அவசர உதவி எண்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் “காவல் நண்பன்” என்றகுறும்படமும் தயாரிக்கப்பட்டது. இவற்றின் வெளியீட்டு விழா தூத்துக்குடி காமராஜ் கல்லூரி வளாகத்தில் நடந்தது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல்.பாலாஜி சரவணன் தலைமை வகித்து குறும்படங்களை வெளியிட்டார். அவர் பேசும்போது, ‘‘மாணவ,மாணவிகளுக்கு கல்வி முக்கியமானதாக இருக்க வேண்டும். விளையாட்டை போல் வாழ்க்கையிலும் நமக்கென எல்லைகளை வகுத்து, விதிமுறைகளை கடைபிடித்து குறிக்கோள்களை அடைந்தால் வாழ்க்கை சிறப்பாக அமையும்.

சமூகத்தில் உயரிய பதவியில் இருக்கும் பலர் கிராமத்தில் இருந்து வந்தவர்கள் தான். மாணவர்கள் தங்களது திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். போதைக்குஅடிமையாகாமல் தங்களை நல்ல செயல்களில் ஈடுபடுத்தி, சாதனையாளர்களாக வரவேண்டும்’’ என்றார்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை காமராஜ்கல்லூரி நிர்வாகம் மற்றும் தூத்துக்குடி மாவட்ட கலையுலக தொழில்நுட்பம் மற்றும் நடிகர்கள் சங்க உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

நிகழ்ச்சியில் தூத்துக்குடி ஊரக உதவி காவல் கண்காணிப்பாளர் சந்தீஸ், காமராஜ் கல்லூரி முதல்வர் நாகராஜன், திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகதேசிய சேவை திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆறுமுகம், திரைப்படத்துறை தயாரிப்பாளர் மற்றும் செயல்இயக்குநர் மதன், இயக்குநர் சாம்ராஜ்,தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் ஆனந்தராஜன், போக்குவரத்து பிரிவுகாவல் ஆய்வாளர் மயிலேறும்பெரு மாள் உள்ளிட்ட காவல்துறையினர் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in