Published : 17 May 2016 06:45 PM
Last Updated : 17 May 2016 06:45 PM

இறுதி நிலவரம்: தமிழகத்தில் 74.26% வாக்குகள் பதிவு

வாக்குப்பதிவில் கடந்த தேர்தலை விட 3.75 சதவீதம் குறைவு

தமிழகம் முழுவதும் இறுதி நிலவரப்படி 232 தொகுதிகளிலும் 74.26 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. இந்த தேர்தலில் 4 கோடியே 28 லட்சத்து 73 ஆயிரத்து 674 பேர் வாக்களித்துள்ளனர்.

தமிழகத்தில் தற்போதுள்ள 14-வது சட்டப்பேரவையின் பதவிக்காலம் மே 22-ம் தேதியுடன் முடிகிறது. புதிய சட்டப்பேரவைக்கான உறுப்பினர்களை தேர்வு செய்ய திங்கட்கிழமை (16-ம் தேதி) தேர்தல் நடந்தது. அதிகளவு பணப்பட்டுவாடா புகார் காரணமாக அரவக்குறிச்சி மற்றும் தஞ்சாவூர் தவிர 232 தொகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 65 ஆயிரத்து 486 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது.

காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக பல இடங்களில் மழை இருந்தாலும், பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்குகளை செலுத்தினர். அரசியல் கட்சிகள் மழை பாதித்த மாவட்டங்களில் வாக்குப்பதிவு நேரத்தை நீட்ட கோரிய போதும், ஆணையம் நீட்டிக்கவில்லை. வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு முடிந்த நிலையில் சில பகுதிகளில் மட்டும் டோக்கன் வழங்கப்பட்டு மீதமிருந்தவர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.

74.26 சதவீதம்

இதற்கிடையில் திங்கட்கிழமை இரவு 232 தொகுதிகளிலும் 73.76 சதவீதம் வாக்குகள் பதிவானதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி அறிவித்தார். ஆயிரத்து 221 வாக்குச்சாவடிகள் மலைப்பகுதிகளில் இருந்ததாலும், மழையால் பல பகுதிகளிலிருந்தும் முழுமையான வாக்குப்பதிவு விவரங்கள் கிடைக்காததாலும், இறுதிக்கட்ட வாக்குச்சதவீதம் செவ்வாய்க்கிழமை காலை அறிவிக்கப்பட்டது. இதன் படி, தமிழகம் முழுவதும் 74.26 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. இது கடந்த 2011 சட்டப்பேரவை தேர்தலை (78.01) விட 3.75 சதவீதம் குறைவாகும்.

அரவக்குறிச்சி, தஞ்சை தொகுதிகளின் வாக்காளர்களை தவிர்த்து நேற்று 2 கோடியே 86 லட்சத்து 36 ஆயிரத்து 94 ஆண்கள், 2 கோடியே 90 லட்சத்து 92 ஆயிரத்து 778 பெண்கள், 4 ஆயிரத்து 702 மூன்றாம் பாலினத்தவர் என 5 கோடியே 77 லட்சத்து 33 ஆயிரத்து 574 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். ஆனால், இவர்களில் 2 கோடியே 12 லட்சத்து 44 ஆயிரத்து 129 ஆண்கள், 2 கோடியே 16 லட்சத்து 28 ஆயிரத்து 807 பெண்கள் மற்றும் 738 மூன்றாம் பாலினத்தவர் என 4 கோடியே 28 லட்சத்து 73 ஆயிரத்து 674 பேர் வாக்களித்துள்ளனர்.

வாக்குப்பதிவு சதவீதத்தை பொறுத்தவரை, மாவட்டங்கள் அடிப்படையில், அதிகபட்சமாக தர்மபுரி மாவட்டத்தில் 85.03 சதவீதம் பதிவாகியுள்ளது. குறைந்த பட்சமாக தலைநகர் சென்னையில் 60.99 சதவீதம் மட்டுமே பதிவாகியிருந்தது.

தொகுதி அடிப்படையில், அதிகபட்சமாக தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் 88.49 சதவீதமும், குறைந்த பட்சமாக சென்னை மாவட்டம் துறைமுகம் தொகுதியில் 55.27 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன.

குறிப்பாக, தர்மபுரி (85.03), அரியலூர் (83.77), கரூர் (83.09), திருவண்ணாமலை (82.99), நாமக்கல் (82.10), சேலம் (80.09) ஆகிய 6 மாவட்டங்களில் 80 சதவீதத்துக்கும் அதிகமாக வாக்குகள் பதிவாகியுள்ளன. 20 மாவட்டங்களில் 70- 80 சதவீதமும், 5 மாவட்டங்களில் 60- 70 சதவீதம் வாக்குகளும் பதிவாகியுள்ளன.

வாக்கு எண்ணிக்கை

அனைத்து தொகுதிகளிலும் வாக்குப்பதிவு முடிந்ததும், மின்னணு இயந்திரங்கள் அரசியல் கட்சி முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டு, பாதுகாப்பாக தமிழகம் முழுவதம் அமைக்கப்பட்டுள்ள 68 வாக்கு எண்ணும் மையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டன.அங்கு காற்றுப்புகாத ‘ஸ்டிராங்’ அறையில் வைக்கப்பட்டு, பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையத்தின் அறிவிப்புப்படி வரும் 19-ம் தேதி காலை 8 மணிக்கு 68 மையங்களிலும் வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் துறை செய்துள்ளது. முதலில் தொகுதிவாரியாக தபால் வாக்குகள் எண்ணப்படும்.அதன் பின் வாக்குகள் அடிப்படையில் சுற்றுக்கள் பிரிக்கப்பட்டு, வாக்குகள் எண்ணப்படும். 19-ம் தேதியான வியாயக்கிழமை பிற்பகல் 12 மணிக்கே பெரும்பான்மை தொகுதிகளில் இறுதி நிலவரம் தெரிந்து விடும்.

பிளஸ் 2 தேர்வின் முடிவில் ஆண்டு மொத்த தேர்ச்சி விகிதம் 91.4%.கடந்த 2014, 2015 ஆண்டுகளில் பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி விகிதம் 90.6% ஆக இருந்தது. இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 91.4% ஆக அதிகரித்துள்ளது. விரிவான செய்திக்கு... >தமிழகத்தில் பிளஸ் 2 தேர்ச்சி விகிதம் 91.4% ஆக உயர்வு

பிளஸ் 2 தேர்வில், வருவாய் மாவட்ட அளவிலான தேர்ச்சி விகிதத்தில் ஈரோடு மாவட்டம் 95.7 சதவீதத்துடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது. வேலூர் மாவட்டம் 83.13 சதவீதத்துடன் கடைசி இடத்தில் உள்ளது. சென்னை 91.81 சதவீதத்துடன் 17-வது இடத்தைப் பிடித்துள்ளது. விரிவான செய்திக்கு... >பிளஸ் 2 தேர்ச்சி விகிதத்தில் ஈரோடு முதலிடம்; கடைசி இடத்தில் வேலூர்

2016 பிளஸ் 2 தேர்வில், வருவாய் மாவட்ட அளவிலான அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தில் ஈரோடு மாவட்டம் 94.86 சதவீதத்துடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம் 74.57 சதவீதத்துடன் கடைசி இடத்தில் உள்ளது. சென்னை 86.17 சதவீதத்துடன் 22 வது இடத்தைப் பிடித்துள்ளது. விரிவான செய்திக்கு... >பிளஸ் 2 அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தில் ஈரோடு முதலிடம்; கடைசி இடத்தில் திருவள்ளூர்

பிளஸ் 2 தமிழ் வழிக் கல்வி பிரிவில் மதுரை மாணவி நாகநந்தினி மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். விரிவான செய்திக்கு... >பிளஸ் 2 தமிழ் வழிக் கல்வி பிரிவில் மாநில முதலிடம்: மதுரை மாணவி நாகநந்தினி சாதனை

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. இதில், 200-க்கு 199 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் தமிழ் மொழிப் பாடத்தில் 3 மாணவிகள், 1 மாணவர் என மொத்தம் 4 பேர் முதலிடம் பிடித்துள்ளனர். விரிவான செய்திக்கு... >பிளஸ் 2 தேர்வு: தமிழில் நால்வர் மாநில அளவில் முதலிடம்

பிளஸ் 2 தேர்வு பாடவாரியாக முழு மதிப்பெண்கள் பெற்றவர்கள் எண்ணிக்கையில், கணக்குப்பதிவியல் பாடத்தில் அதிகபட்சமாக ,341 பேரும், குறைந்தபட்சமாக இயற்பியலில் 5 பேரும் சதமடித்து சாதனை படைத்துள்ளனர். விரிவான செய்திக்கு... >பிளஸ் 2 சதங்கள்: அதிகபட்சமாக கணக்குப்பதிவியல் 4,341 பேர், குறைந்தபட்சமாக இயற்பியலில் 5 பேர் சாதனை

பிளஸ் 2 தேர்வு முடிவுகளில் நிர்வாக ரீதியாக சுயநிதி மெட்ரிக் பள்ளிகள் தேர்ச்சி விகிதம் இந்த ஆண்டும் அதிக அளவில் இருக்கிறது. சுயநிதி மெட்ரிக் பள்ளிகள் தேர்ச்சி விகிதம் 97.61%, அரசுப் பள்ளிகள் தேர்ச்சி விகிதம் 85.71%. விரிவான செய்திக்கு... >பிளஸ் 2 தேர்ச்சி விகித ஒப்பீடு: சுயநிதி மெட்ரிக் 97.61%, அரசுப் பள்ளிகள் 85.71%

பிளஸ் 2 அரசுப் பள்ளிகள் பிரிவில் காஞ்சிபுரம் மாணவி சரண்யா மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார். விரிவான செய்திக்கு... >பிளஸ் 2 அரசுப் பள்ளிகள் பிரிவில் மாநில முதலிடம்: காஞ்சிபுரம் மாணவி சாதனை

எதிர்காலத்தில் நாட்டின் பிரதமராவதே தனது லட்சியம் எனக் கூறியுள்ளார் பிளஸ் 2 தேர்வில் பிரெஞ்சு மொழியை முதல் பாடமாக எடுத்து படித்து மாநிலத்தில் முதலிடம் பெற்ற மாணவி சத்ரியா கவின். விரிவான செய்திக்கு... >நான் பிரதமர் ஆவேன்: பிளஸ் 2 சாதனை மாணவி சத்ரியா லட்சியம்



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x