Published : 15 May 2016 09:35 AM
Last Updated : 15 May 2016 09:35 AM

தேர்தல் பாதுகாப்பு பணிக்காக சென்னையில் 18 ஆயிரம் போலீஸார் குவிப்பு: காவல் ஆணையர் அசுதோஷ் சுக்லா தகவல்

சென்னையில் தேர்தல் பாதுகாப்பு பணியில் 18 ஆயிரம் போலீஸார் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று சென்னை பெருநகர காவல் ஆணை யர் அசுதோஷ் சுக்லா கூறியுள் ளார்.

இது தொடர்பாக நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் அசுதோஷ் சுக்லா கூறியிருப்பதாவது:

சென்னையில் 18 ஆயிரம் போலீஸார் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். சென்னையில் உள்ள 298 வாக்குச்சாவடிகள் பதட்டமானவை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்கு 1,360 துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். போலீஸார் அடங் கிய 420 பறக்கும் படையினர் தொடர்ந்து சோதனையில் ஈடுபடு வார்கள்.

ஊர்க்காவல் படையினர், முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் போலீஸார் ஆகியோரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

4 கூடுதல் ஆணையர்கள், 6 இணை ஆணையர்கள், 21 துணை ஆணையர்கள், 78 உதவி ஆணையர்கள், 310 ஆய்வாளர்கள் தலைமையில் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படும் இடங்களில் உடனடியாக போலீஸாரை குவிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்காக 4 போலீஸ் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்படுகின்றன.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x