காரில் இருந்து இறங்கி வீடு தேடி பொதுமக்களை சந்தித்த ராகுல் காந்தி: பதற்றமடைந்த பாதுகாப்பு அதிகாரிகள்

காரில் இருந்து இறங்கி வீடு தேடி பொதுமக்களை சந்தித்த ராகுல் காந்தி: பதற்றமடைந்த பாதுகாப்பு அதிகாரிகள்
Updated on
1 min read

மதுரையில் நேற்று பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் பேசிய பிறகு, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி விமான நிலையம் நோக்கி காரில் புறப்பட்டார். கூட்ட மேடையில் இருந்து 200 மீட்டர் தொலை வில் இருந்த தாகூர் நகரில் ஒரு சந்து வழியாக ராகுல் காந்தியின் கார் முன்னும், பின்பும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்றது. சாலைகள், தெருக்களில் நின்றிருந்தவர்கள் ராகுல் காந்தியைப் பார்த்ததும் உற்சாகமாக கை அசைத்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப் படுத்தினர்.

அப்போது மணி என்பவர் தனது மனைவி, உறவினர்களுடன் ராகுல் காந் தியை பார்த்து மகிழ்ச்சியுடன் கை அசைத் தார். இதைக் கவனித்த ராகுல் காந்தி உடனே காரை நிறுத்தச் சொல்லி வேகமாக காரில் இருந்து இறங்கி மணியின் வீட்டை நோக்கி சென்றார். அங்கிருந்த அனை வரிடமும் கை கொடுத்து வணக்கம் தெரி வித்தார். இதனால் பதற்றமடைந்த பாது காப்பு அதிகாரிகள் ராகுல் காந்தியை சுற்றி நின்றனர். பின்னர் காரில் ஏறிய அவர் நத்தம் பிரதான சாலைக்கு வந்தார். அப்போது அவரைப் பார்க்க நின்றிருந்த ஏராளமான தொண்டர்கள், பொதுமக்களை போலீஸார் தடுத்து நிறுத்தி இருந்தனர். இவர்கள், ராகுல் காந்தியை பார்த்ததும் கரகோஷம் எழுப்பினர்.

உடனே மீண்டும் காரில் இருந்து இறங் கிய ராகுல் காந்தி தொண்டர் ஒருவருக்கு சால்வையை அணிவித்து சென்றார்.

பாதுகாப்புக் கெடுபிடியை மீறி ராகுல் இரண்டு முறை காரில் இருந்து இறங்கியதால் பாதுகாப்பு படையினர் அதிர்ச்சி அடைந்தனர். ராகுலை சந்தித்த மகிழ்ச்சியில் இருந்த தாகூர் நகரைச் சேர்ந்த மணி கூறும்போது, நாங்கள் கற்பனை செய்துகூட பார்க்க முடியாத சம்பவம் இது. ராகுலை சந்தித்து கைகுலுக்கிய அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை. ராகுல் காந்தியை சந்தித்த சம்பவம் உண்மையா, கனவா என்பதுகூட தெரியாமல் இருக்கிறோம் என்றார்.

‘மைக்’ வேலை செய்யவில்லை

மதுரை தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ராகுல் காந்தி ஆங்கிலத்தில் பேசியதை முன்னாள் மத்திய அமைச்சர் திருநாவுக்கரசர் மொழி பெயர்த்தார். அப்போது ஒரு கட்டத்தில், திருநாவுக்கரசர் பேசிய மைக் சரியாக வேலை செய்யவில்லை. அதனால், அவர் உடனே ராகுல்காந்தியின் அனுமதியைக் கூட எதிர்பாராமல், அவரது மைக்கை பிடித்து மொழி பெயர்ப்பை தொடர்ந்தார். இதைப் பார்த்த ராகுல் காந்தி சிரித்துக் கொண்டே, ‘‘இதுபோன்ற நிகழ்வை முதல்வர் ஜெயலலிதாவின் மேடை யில் பார்க்க முடியுமா, பக்கத்தில் நிற்கவாவது அவர் அனுமதித்து இருப்பாரா?” எனக் கேள்வி எழுப்பினார். அப்போது கூட்டத்தினர் பலத்த கரகோஷம் எழுப்பினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in