“சமூக நீதிப் பாதையில் தொடர்ந்து பாடுபடுவீர்!” - பாமக தலைவர் அன்புமணிக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

“சமூக நீதிப் பாதையில் தொடர்ந்து பாடுபடுவீர்!” - பாமக தலைவர் அன்புமணிக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
Updated on
1 min read

சென்னை: பாமக தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள அன்புமணி ராமதாஸுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

பாமக சிறப்பு பொதுக் குழு கூட்டம் திருவேற்காட்டில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், பாமக தலைவராக அன்புமணி ராமதாஸ் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில், அன்புமணி ராமதாஸுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், "பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய தலைவராகப் பொறுப்பேற்றுள்ள அன்புமணி ராமதாஸுக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்! சமூக நீதிப் பாதையில் பாட்டாளி மக்களின் முன்னேற்றத்திற்காகத் தொடர்ந்து பாடுபட வாழ்த்துகிறேன்!" என்று தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in