

பிரதமர் நரேந்திர மோடி கன்னி யாகுமரியில் வரும் 8-ம் தேதி தேர்தல் பிரச்சாரம் செய்கிறார். இக்கூட்டம் நடைபெறும் இடத்தை மத்திய இணையமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்த பின் இதை தெரிவித்தார்.
கடந்த மக்களவைத் தேர்தலின் போது, கன்னியாகுமரியில் நாற் கர சாலை அருகிலுள்ள ஏழு சாட்டுபத்து மைதானத்தில் பிரத மர் பேசினார். தற்போதும், இதே மைதானத்தில் அவரது பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. மேடை மற்றும் பிற ஏற்பாடுகள் குறித்து, மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று ஆய்வு செய்தார்.
அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பாஜக மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர் களை ஆதரித்து பிரச்சாரம் செய் வதற்காக பிரதமர் நரேந்திர மோடி வரும் 8-ம் தேதி கன்னியாகுமரி வருகிறார். இத்தேர்தலில் பாஜக வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும் என்ற நம்பிக்கையுடன் களம் இறங்கியுள்ளோம்.
அதிமுக, திமுக ஆகிய கட்சிகள் பொய்யான வாக்குறு திகளை அளித்து ஏமாற்றி வரு கின்றன. வாக்குகளை பணம் கொடுத்து விலைக்குவாங்கும் முயற்சி தீவிரமடைந்துள்ளது. பணம் பட்டுவாடா செய்ய பல இடங்களில் பணம் பதுக் கப்பட்டுள்ளது என்றார் அவர்.