Published : 20 May 2016 09:32 AM
Last Updated : 20 May 2016 09:32 AM

வெறிச்சோடி காணப்பட்ட தேமுதிக, கம்யூனிஸ்ட் கட்சி தலைமை அலுவலகங்கள்

சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானபோது, தேமுதிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.

காலையில் 9 மணிவரை கட்சி யின் தலைவர்கள் யாரும் வராமல் வெறிச்சோடிக் காணப்பட்டது தி.நகர் வைத்தியராமன் தெருவில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகம். காலை 10 மணியளவில் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் அ.சவுந்தர்ராஜன் மட் டும் அலுவலகத்துக்கு வந்தார்.

தி.நகர் சிவாஜி கணேசன் சாலையிலுள்ள இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி அலுவலகத்தில் மாநில செயலாளர் முத்தரசன் மற்றும் அலுவலக ஊழியர்கள் ஓரிருவர் மட்டுமே இருந்தனர். அங்கு வந்திருந்த ஊடக நண்பர்களோடு தொலைக்காட்சி பார்த்தபடி உரையாடிக் கொண்டி ருந்தார் முத்தரசன்.

கோயம்பேட்டில் இருக்கும் தேமுதிக அலுவலகமும் வெறிச் சோடிக் காணப்பட்டது. காலை 10 மணி வரை அலுவலகத்தில் அமர்ந்து தொலைக்காட்சி பார்த் துக் கொண்டிருந்த அலுவலக ஊழியர்களும், “தேமுதிக தலைவர்கள் யாரும் இங்கே வரமாட்டாங்க. மீடியாக்காரங்க எல்லாம் போகலாம்” என்று அங்கு காத்திருந்த ஓரிரு பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி ஊழி யர்களையும் வெளியே அனுப்பி விட்டு, கதவைத் தாழிட்டுக் கொண்டனர்.

சென்னையில் வெறிச்சோடிய பாஜக தலைமை அலுவலகம் கமலாலயம் - படம்: ம.பிரபு

மார்க்சிஸ்ட் அலுவலகம்:படம்: ம.பிரபு

இந்திய கம்யூனிஸ்ட் அலுவலகம்: படம்: ம.பிரபு

காங்கிரஸ் அலுவலகம் சத்தியமூர்த்தி பவன் | படம்:ம.பிரபு

மதிமுக அலுவலகம்: படம்: ம.பிரபு

தேமுதிக அலுவலகம்: படம்: ம.பிரபு

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x