

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே கிரிக்கெட் விளையாடும்போது நெஞ்சில் பந்து விழுந்ததில் மாணவர் உயிரி ழந்தார்.
ராமநாதபுரம் அருகே வன்னி வயலைச் சேர்ந்த பழனிக்குமார் மகன் சுபாஷ்குமார்(11). அங் குள்ள அரசுப்பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார்.
நேற்று தனது நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிக் கொண் டிருந்தார். அப்போது மாணவரின் நெஞ்சில் கிரிக்கெட் பந்து பட்டதில் மயங்கி விழுந்தார்.
உடனடியாக அவரை ராமநா தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு வந்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் மாணவர் இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து பஜார் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.