உங்கள் வாக்குச்சாவடியை எஸ்.எம்.எஸ். மூலம் அறிய வசதி

உங்கள் வாக்குச்சாவடியை எஸ்.எம்.எஸ். மூலம் அறிய வசதி
Updated on
1 min read

உங்கள் வாக்குச்சாவடி விவரத்தை எஸ்.எம்.எஸ். மூலம் எளிதில் அறிந்துகொள்ள வழிவகுக்கப்பட்டுள்ளது.

அதற்கான எளிய வழி இதுதான்:

உங்கள் வாக்காளர் அடையாள அட்டை எண்ணை மட்டும் டைப் செய்து '1950' என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்புங்கள். உடனே உங்களுக்கு எஸ்.எம்.எஸ். வரும்.

அந்தக் குறுந்தகவலில் வாக்காளர் பெயர், பெற்றோர் / பாதுகாவலர் பெயர், முகவரி, சட்டமன்றத் தொகுதி, வாக்குச்சாவடி நிலையம், வாக்களிக்க வேண்டிய இடத்தின் முகவரி உள்ளிட்ட அனைத்து விவரங்களும் இருக்கும்.

இந்த எஸ்.எம்.எஸ். சலுகை இலவசம் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in