குழந்தைகளுக்கு பிரதமர் நன்றி

குழந்தைகளுக்கு பிரதமர் நன்றி
Updated on
1 min read

சென்னைக்கு நேற்று வந்த பிரதமர் மோடி, ஐஎன்எஸ் அடையாறு கடற்படை தளத்தில் இருந்து நேருவிளையாட்டு அரங்கத்துக்கு பிரதமர் மோடி சாலை வழியாக காரில் சென்றார். சாலையோரங்களில் திரண்டிருந்த பாஜகவினர் கைகளையும், கொடிகளையும் அசைத்து பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பிரதமர் சென்ற சாலைகளில் வாழை மரங்கள், பாஜக கொடிகள் கட்டப்பட்டிருந்தன. மேளதாளங்கள் முழுங்க பொய்கால் குதிரையாட்டம், கதகளி உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.

பிரதமரின் கார் மெதுவாக சென்று கொண்டிருந்தது. அப்போது செங்கல்பட்டு மாவட்ட பாஜக தலைவர் செம்பாக்கம் வேத.சுப்பிரமணியம், பிரதமர் மோடியிடம் கையை அசைத்து குழந்தைகள் நடனம் ஆடுவதாக கூறினார். இதை பார்த்த பிரதமர் மோடி காரை நிறுத்தச் சொன்னார். பின்னர், கார் கதவை திறந்து நின்றபடி அங்கிருந்த குழந்தைகளிடம் நன்றி தெரிவித்தார்.

பிரதமரின் வருகையையொட்டி விமான நிலையம் முதல் வழிநெடுகிலும் பாஜக கொடிகள், வண்ண சுவரொட்டிகள், பதாகைகள், சிறியதும் பெரியதுமான டிஜிட்டல் பேனர்கள் என மாநகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது. கொளுத்தும் வெயிலிலும் பிரதமரை வரவேற்க பாஜகவினர் ஏராளமானோர் திரண்டிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in