Published : 07 May 2016 08:45 AM
Last Updated : 07 May 2016 08:45 AM

பட்டாபிராம் அருகே ரயில் தடம் புரண்டதால் சேதமடைந்த தண்டவாளங்கள் சீரமைப்பு

பட்டாபிராம் அருகே மின்சார ரயில் மீது திருவனந்தபுரம் விரைவு ரயில் மோதி ஏற்பட்ட விபத்தால், சேதமடைந்த தண்டவாள பகுதி களை மாற்றியமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

நேற்று முன் தினம் இரவு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து பட்டாபிராம் மில்டரி சைடிங் ரயில் நிலையம் நோக்கி சென்ற புறநகர் ரயில், இந்து கல்லூரி ரயில் நிலையத் துக்கும் பட்டாபிராம் ரயில் நிலை யத்துக்கும் இடையே போய் கொண் டிருந்தது. அப்போது, சென்னை, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து வந்த திருவனந்தபுரம் விரைவு ரயில், மின்சார ரயிலின் பக்கவாட்டில் மோதியது. இதில் விரைவு ரயிலின் இன்ஜின் மற்றும் இரு பெட்டிகள் தடம் புரண்டன. இந்த விபத்தில் காயம்பட்ட பயணிகள் அரசு பொதுமருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர். இதன் காரணமாக சென்னை - அரக் கோணம் மார்க்க ரயில்கள் ஆங் காங்கே நிறுத்தி வைக்கப்பட்டன.

இதைத் தொடர்ந்து தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மற்றும் ரயில்வே ஊழியர்கள் விபத்துக் குள்ளான ரயில்களை அப்புறப் படுத்தும் பணியில் ஈடுபட்டனர். நேற்று அதிகாலை 1 மணியளவில் புறநகர் ரயில் பாதையில் உள்ள தண்டவாளப் பகுதி சீரமைக்கப் பட்டு ரயில்கள் அடுத்தடுத்து இயக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து சேத மடைந்த விரைவு ரயில் தண்ட வாளப் பகுதிகளை சீரமைக்கும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

பயணிகள் அவதி

மேலும், விரைவு ரயில் தடம்புரண்டதால், நேற்று சென்னை- அரக்கோணம் ரயில்வே மார்க்க புறநகர் ரயில்கள் ஒரு மணி நேரத்துக்கு ஒன்று என்கிற ரீதியில் இயங்கின. விரைவு ரயில்களும் காலதாமதமாக சென் றன. இதனால் பயணிகள் அவதிக் குள்ளாயினர். பகுதிகளை மாற்றி யமைக்கும் பணி தீவிரமாக நடந்தது. நேற்று மாலை முதல் வழக்கமாக ரயில் போக்குவரத்துத் தொடங்கியது.

நிவாரணம்

பலத்த காயம் அடைந்த அபிஹித் நிகோ மற்றும் சத்தீஷ் ஆகிய இருவருக்கும் தலா ரூ.25 ஆயிரத்தை தெற்கு ரயில்வே நிர்வாகம் நிவாரணத் தொகை யாக வழங்கியுள்ளது. இவர்கள் இருவரும் பெரம்பூர் ரயில்வே மருத் துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதேபோல், லேசான காயம் அடைந்த ஆனந்தன், திலகமணி, பொன்மொழியான் மற்றும் மணி ஆகிய 4 பேருக்கும் தலா ரூ.5 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. காயம் அடைந்த பயணிகளை தெற்கு ரயில்வே பொதுமேலாளர் வசிஷ்ட ஜோஹ்ரி நேற்று மருத்துவமனையில் சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x