கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை ரூ.60 ஆக குறைந்தது

கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை ரூ.60 ஆக குறைந்தது

Published on

சென்னை: கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை கிலோ ரூ.60 ஆக குறைந்தது. பண்ணை பசுமை கடைகளில் ரூ.63-க்கு விற்கப்பட்டு வருகிறது.

கோடை காலம் தொடங்கியதில் இருந்து கோயம்பேடு சந்தைக்கு தக்காளி வரத்து குறைந்து, அதன் விலை கடுமையாக உயர்ந்து வந்தது. கிலோ ரூ.100 வரை உயர்ந்திருந்தது. வெளிச் சந்தைகளில் சில்லறை விலையில் ரூ.120 வரை விற்கப்பட்டு வந்தது. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாயினர். இந்நிலையில் பண்ணை பசுமை கடைகளில் மலிவு விலையில் தக்காளி விற்க அரசு கூட்டுறவுத் துறை நடவடிக்கை எடுத்தது. தமிழகம் முழுவதும் தினமும் சுமார் 4 டன் தக்காளி விற்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அங்கு தொடக்கத்தில் கிலோ ரூ.79-க்கு விற்கப்பட்டது.

கோயம்பேடு சந்தைக்கு கடந்த சில நாட்களாக தக்காளி வரத்து அதிகரித்துள்ள நிலையில், அதன் விலை நேற்று கிலோ ரூ.60 ஆக குறைந்துள்ளது. கடந்த சில தினங்களில் மட்டும் ரூ.35 வரை குறைந்துள்ளது. பண்ணை பசுமை கடைகளில் நேற்று கிலோ ரூ.63-க்கு விற்கப்பட்டது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in