Published : 10 May 2016 08:13 AM
Last Updated : 10 May 2016 08:13 AM

உடுமலைப்பேட்டை சங்கர் கொலை: கவுசல்யாவின் பெற்றோருக்கு ஜாமீன் மறுப்பு

உடுமலைப்பேட்டை சங்கர் ஆணவக் கொலையில் கைதான கவுசல்யாவின் பெற்றோர் மற்றும் கொலையில் தொடர் புடைய இளைஞருக்கு ஜாமீன் மறுத்து சென்னை உயர் நீதிமன்ற விடுமுறை கால நீதிமன்றம் உத்தரவிட்டது.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட் டையைச் சேர்ந்த சங்கரும், கவுசல்யாவும் கலப்புத் திருமணம் செய்துகொண்டனர். இந்த திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த கவுசல்யாவின் குடும்பத்தினர், உடுமலைப்பேட்டையில் பொருட்கள் வாங்க கடைக்குச் சென்ற சங்கர் மற்றும் கவுசல்யாவை நடுரோட்டில் வைத்து வெட்டினர்.

இதில் சங்கர் பலியானார். கவுசல்யா வெட்டுக்காயங்களுடன் உயிர் பிழைத் தார். இந்த சம்பவம் எதிரொலியாக உடு மலைப்பேட்டை போலீஸார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, கவுசல்யாவின் தந்தை சின்னசாமி, தாயார் அன்னலட்சுமி மற்றும் கொலையில் ஈடு பட்ட 5 இளைஞர்களை கைது செய்தனர்.

கைதாகி சிறையில் உள்ள கவுசல்யா வின் பெற்றோர் சின்னசாமி, அன்ன லட்சுமி மற்றும் இளைஞர் வி.பிரசன்ன குமார் ஆகியோர் ஜாமீ்ன் வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை விடுமுறை கால நீதி பதி பி.கலையரசன் முன்பாக நடந்தது.

அப்போது நீதிபதி, ‘ஜாதியின் பெய ரால் சமூகம் சீரழிந்துகொண்டு இருக் கிறது என்பதற்கு இந்த வழக்கு ஒரு உதாரணம். இந்த வழக்கின் குற்றவாளி களை இப்போதைய சூழலில் வெளியே விட்டால் மீண்டும் இதுபோன்ற சம்பவம் நடக்காது என்பதற்கு உத்தரவாதம் கிடை யாது. ஜாதிய ஆதிக்கத்தால் சாட்சி களை கலைத்துவிடும் அபாயமும் உள்ளது. எனவே சமூகத்தின் மீதுள்ள அக்கறையால், அவர்கள் 3 பேரது ஜாமீன் மனுக்களும் தள்ளுபடி செய்யப் படுகிறது’’ என உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x