Published : 17 May 2016 03:32 PM
Last Updated : 17 May 2016 03:32 PM

நான் பிரதமர் ஆவேன்: பிளஸ் 2 சாதனை மாணவி சத்ரியா லட்சியம்

எதிர்காலத்தில் நாட்டின் பிரதமராவதே தனது லட்சியம் எனக் கூறியுள்ளார் பிளஸ் 2 தேர்வில் பிரெஞ்சு மொழியை முதல் பாடமாக எடுத்து படித்து மாநிலத்தில் முதலிடம் பெற்ற மாணவி சத்ரியா கவின்.

பிளஸ் 2 தேர்வு முடிவுக்கு பின்னர் ரேங்க் பட்டியலில் இடம்பெற்ற பெரும்பாலான மாணவர்கள் டாக்டர், இன்ஜினியர், கலெக்டர், சிலர் சற்று வித்தியாசமாக பைலட் என்றெல்லாம் தங்கள் எதிர்காலத் திட்டங்கள் குறித்து தெரிவித்திருக்கின்றனர். ஆனால், இன்று பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியான பின்னர் பேட்டியளித்த சென்னை மாணவி மிக வித்தியாசமாக 'நான் பிரதமராவேன்' எனக் கூறியுள்ளார்.

பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை வெளியாகின. பிரெஞ்சு மொழியை முதல் பாடமாக எடுத்து படித்த சென்னை குட்ஷபர்டு பள்ளி மாணவி சத்ரியா கவின் 1195 மதிப்பெண்கள் பெற்று பிறமொழி பாடப்பிரிவில் மாநிலத்திலேயே முதலிடம் பிடித்துள்ளார். அதே பள்ளியை சேர்ந்த ஸ்ருதி என்பவர் 1194 மதிப்பெண்களுடன் இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.

தனது வெற்றி குறித்து ஊடகங்களுக்கு பேட்டியளித்த சத்ரியா கவின், "இந்த வெற்றிக்குக் காரணமான ஆசிரியர்கள், பெற்றோர்கள், நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. டெல்லி பல்கலைக்கழகத்தில் மேல்படிப்பை படிக்க விரும்புகிறேன். நாட்டின் பிரதமராவதே எனது லட்சியம்" என்று தெரிவித்துள்ளார்.

பிரெஞ்சு மொழி படித்ததற்கான காரணம் குறித்து பதிலளித்த கவின், "பத்தாம் வகுப்பு வரை தமிழ் மொழிதான் படித்தேன். ஒரு புதுமொழி கற்க வேண்டும் என்ற ஆர்வத்திலேயே பிரெஞ்சு கற்றேன்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x