

சென்னை மயிலாப்பூர் தொகுதி யில் அதிமுக வேட்பாளரான முன் னாள் டிஜிபி ஆர்.நடராஜுக்கு தொகுதி தேர்தல் அலுவலர் அமிர்த ஜோதி அனுப்பிய நோட்டீஸில் கூறியுள்ளதாவது:
மயிலாப்பூர் தொகுதியின் சுயேச்சை வேட்பாளர்கள் பி.ராம தாஸ், ஜோஸ்வா ஜெராட் ஆகி யோர் சார்பில் உங்கள் மீது புகார் கூறி மனு அளித்துள்ளனர்.
அதில், தொகுதியில் பிரச்சாரம் மேற்கொள்ளும் நீங்கள், ‘நடராஜ் ஐபிஎஸ் டிஜிபி (ஓய்வு)’ என்று குறிப்பிடுவதாகவும், உங்கள் பிரச் சார வாகனத்தில் உள்ள பேனரி லும் ஆர்.நடராஜ் ஐபிஎஸ் என்று குறிப்பிட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர். அதற்கான சான்றுகளையும் அளித்துள்ளனர். இந்த புகார்களின் மீது 24 மணி நேரத்துக்குள் விளக்கம் அளிக்க வேண்டும்.