சிவகாசி மாநகராட்சிக் கூட்ட அரங்கில் பிரதமர் மோடி படத்தை வைக்க வேண்டும் என  படத்துடன் வந்த பாஜக கவுன்சிலர் குமரிபாஸ்கர்.
சிவகாசி மாநகராட்சிக் கூட்ட அரங்கில் பிரதமர் மோடி படத்தை வைக்க வேண்டும் என படத்துடன் வந்த பாஜக கவுன்சிலர் குமரிபாஸ்கர்.

சிவகாசி மாநகராட்சி அலுவலகத்தில் பிரதமர் மோடி படம் வைக்க திமுகவினர் எதிர்ப்பு

Published on

சிவகாசி: சிவகாசியில் நேற்று நடைபெற்ற மாநகராட்சிக் கூட்டத்தில் பிரதமர் மோடி படத்தை கூட்ட அரங்கில் வைப்பதற்கு திமுக கவுன்சிலர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

சிவகாசி மாநகராட்சிக் கூட்டம் மேயர் சங்கீதா தலைமையில் நடைபற்றது. துணை மேயர் விக்னேஷ்பிரியா, ஆணையர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், சொத்து வரி உயர்வு குறித்து மறு சீராய்வு செய்ய வேண்டும் என கவுன் சிலர்கள் சிலர் கோரிக்கை விடுத் தனர்.

30-வது வார்டு அதிமுக கவுன்சிலர் கரைமுருகன் பேசுகையில், முதலில் சிவகாசி நகராட்சியா? மாநகராட்சியா? என்று முதலில் தெரிவியுங்கள் நகரில் அனைத்து இடங்களிலும் சிவகாசி நகராட்சி என்று விளம்பரப் பலகை உள்ளது. உடனடியாக மாநகராட்சி என மாற்றப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

அதைத் தொடர்ந்து மாநகராட்சி அலுவலகத்தில் பிரதமர் மோடியின் படத்தை வைக்க வேண்டும் என்று 33-வது வார்டு பாஜக கவுன்சிலர் குமரிபாஸ்கர் பிரதமர் மோடி படத்துடன் வந்தார். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து திமுக கவுன்சிலர்கள் அனைவரும் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால், சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. உடனடியாக அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த அவைக் காவலர்கள் பாஜக கவுன்சிலர் குமரிபாஸ்கருடன் பேச்சுவார்த்தை நடத்தி அவரை அழைத்துச் சென்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in