

பணப் பட்டுவாடாவை தடுப்ப தற்கு தேர்தல் சீர்திருத்தம் அவசி யம் என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செய லாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறி யுள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:
அரவக்குறிச்சி, தஞ்சை தொகுதிகளுக்கான தேர்தலை ஆணையம் ரத்து செய்துள்ளது. ஏற்கெனவே தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்ட பிறகும் பணப் பட்டு வாடா நடந்திருப்பதாக தேர்தல் ஆணையம் கவலை தெரிவித் துள்ளது. அதிமுக, திமுக 2 கட்சிகளுமே பணத்தை வாரி இறைத்து ஜனநாயகத்தை பண நாயகமாக மாற்றியிருக்கின்றன என்ற மக்கள் நலக் கூட்டணியின் குற்றச்சாட்டு தற்போது உண்மை யாகியுள்ளது.
இந்த 2 தொகுதிகள் மட்டு மன்றி மீதமுள்ள 232 தொகுதி களிலுமே திமுக, அதிமுகவினர் பணப் பட்டுவாடா செய்துள்ளனர். தேர்தல் முடிவை தீர்மானித்தது பணப் பட்டுவாடா மட்டுமே என்று சொல்ல முடியாது. ஆனால், பணப் பட்டுவாடா மிக முக்கிய மான பங்கை வகித்துள்ளது. கொள்கையை சொல்லி வாக்கு சேகரிக்கும் சூழல் குறைந்து கொண்டே போவது ஆரோக்கிய மான அரசியலுக்கு உதவாது. இதைத் தடுக்கும் பொறுப்பு தேர் தல் ஆணையத்துக்கு உள்ளது.
எனவே, பணப் பட்டுவாடா செய்யும் வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்வது, தேர்தலில் போட்டியிட தடை விதிப்பது, கிரிமினல் நடவடிக்கை எடுப்பது, அரசியல் கட்சிகளின் மாநில, தேசிய அந்தஸ்து பாதிக்கப்படும் என்ற நிலையை உருவாக்குவது போன்ற ஆலோசனைகளை தேர்தல் ஆணையம் பரிசீலித்து சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.