

சவுகார்பேட்டை டிராவல்ஸ் அதிபர் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்ட 2 பேரை போலீஸார் புனேயில் கைது செய்தனர்.
சென்னை சவுகார்பேட்டை இருளப்பன் தெருவில் டிரா வல்ஸ் ஏஜென்சி நடத்தி வந்த பாபுசிங் (50) என்பவர் கடந்த 3-ம் தேதி மாலையில் துப்பாக்கி யால் சுடப்பட்டு கொலை செய்யப் பட்டார். யானைக்கவுனி காவல் ஆய்வாளர் ரவிக்குமார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த கொலை குறித்து விசாரணை நடத்த 5 தனிப்படை கள் அமைக்கப்பட்டுள்ளன.
பாபுசிங் கடையிலும், பக்கத்து கடைகளிலும் பொருத்தப்பட் டுள்ள கண்காணிப்பு கேமராக்க ளில் கொலையாளியின் உருவம் பதிவாகி இருந்தது. அதில் பதிவான 2 பேரின் புகைப்படங் களை போலீஸார் வெளியிட்டு, அவர்கள் குறித்த தகவலை தெரிவித்தால் ரூ.10 ஆயிரம் பரிசு வழங்கப்படும் என்றும் அறி வித்தனர். இருவரையும் ஆட்டோ வில் கோயம்பேடு வரை கொண்டு சென்ற ஆட்டோ ஓட்டுநரை கண்டுபிடித்து விசாரணை நடத்தி னர். அந்த பகுதி செல்போன் டவர்களில் பதிவான எண்களை வைத்தும் விசாரணை நடத்தப் பட்டது.
இதில் மகாராஷ்டிரா மாநி லத்தை சேர்ந்த ஒருவரின் விவரங் கள் கிடைக்க, அவர் குறித்த மேலும் தகவல்களை பெற மும்பை போலீஸாரின் உதவியை நாடினர். அப்போதுதான், போலீஸ் தேடும் நபர் மீது ஏற்கெனவே பல கொலை வழக்குகள் இருப்பது தெரிந்தது.
2 பேர் சிக்கினர்
அதைத் தொடர்ந்து அவரை பிடிக்க சென்னை போலீஸார் மும்பை விரைந்தனர். நேற்று முன்தினம் இரவில் புனேயில் பதுங்கி இருந்த அந்த நபரை போலீஸார் துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்து பிடித்தனர். விசாரணையில் அவரது பெயர் ராகேஷ்(28) என்பது தெரிந்தது.
அவர் கொடுத்த தகவலின் பேரில் கூட்டாளி சுமன்(27) என்ப வரையும் போலீஸார் பிடித்தனர். பாபு சிங்கை சுட்டுக் கொல்வதற்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியும் அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப் பட்ட இருவரும் நேற்று இரவில் ரயில் மூலம் சென்னை அழைத்து வரப்பட்டனர்.
ரூ.5 லட்சம் கூலி
போலீஸ் அதிகாரி கூறுகையில், "கொலை செய்த ராகேஷ்க்கும், பாபுசிங்கிற்கும் நேரடியாக எந்த தொடர்பும் இல்லை. பாபுசிங்கை கொலை செய்ய கூலிப்படையாக மட்டுமே ராகேஷ் பயன்படுத்தப்பட் டுள்ளார். ராகேஷ் தனக்கு துணை யாக நண்பர் சுமனை அழைத்து வந்துள்ளார். கொலை செய்ய ரூ.5 லட்சம் வாங்கியிருக்கிறார் ராகேஷ். ஆனால் பணம் கொடுத்த வரின் பெயர், விவரங்களை கூற ராகேஷ் மறுத்து வருகிறார். எப்படி கேட்டாலும் தெரியாது என்ற பதிலையே கூறுகிறார். அவரிடம் சென்னையில் விசாரணை நடத்திய பின்னரே கொலைக்கான காரணம் தெரியவரும்" என்றார்.
ஐபிஎல் சூதாட்டத்தில் கொலை
தனிப்படை போலீஸார் நடத்திய விசாரணையில், தற்போது நடந்து வரும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை வைத்து சூதாட்டத்தில் பாபு சிங் ஈடுபட்டதும், அதில் பணம் கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட மோதிலால் அவர் கொலை செய்யப்பட்டு இருப்பதும் தெரியவந்துள்ளது.