

மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் வைகோ நேற்று வெளியிட்ட அறிக்கை:
தேமுதிக - ம.ந. கூட்டணி - தமாகா அணியின் மாற்று அரசியல் வெற்றி மாநாடு, திருச்சியில் மே 11ம் தேதி மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது. திருச்சி மதுரை நெடுஞ்சாலைக்கு மேற்கே அமைந்துள்ள மைதானத்தில் விஜயகாந்த் தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமாகா தலைவர் ஜி.கே.வாசன், மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன், விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத்தின் அவைத் தலைவர் பொ.அய்யாக்கண்ணு ஆகியோர் உரையாற்றுகின்றனர்.
தேமுதிக - ம.ந.கூட்டணி - தமாகா அணியின் தேர்தல் வெற்றியை பிரகடனம் செய்யும் மாநாடாக திருச்சி மாநாடு அமையும். இந்த மாநாட்டில் கூட்டணியின் 6 கட்சித் தொண்டர்களும், பொதுமக்களும் பெருமளவில் கலந்துகொள்ள வேண்டுகிறேன். தமிழகத்தை மீட்பதற்கு வாக்காளர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தும் வண்ணம் தொண்டர்கள் பெருந்திரளாக பங்கேற்க வேண்டும்.
இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.