

தமிழகத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் பால், மின் மற்றும் பேருந்து கட்டண உயர்வால் பாதிக்கப்பட்ட மக்கள், மாற்றத்தை தருவார்கள் என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
நீலகிரி மாவட்டம் குன்னூர், உதகை, கூடலூர் சட்டப்பேரவை தொகுதி திமுக வேட்பாளர்களான பா.மு.முபாரக், மு.திராவிடமணி மற்றும் கூட்டணி கட்சியான காங்கிரஸ் வேட்பாளர் ஆர்.கணேஷ் ஆகியோருக்கு ஆதரவு கோரி குன்னூரில் நேற்று ஸ்டாலின் பேசியதாவது:
தமிழகத்தில் பால் விலை, மின் கட்டணம், பேருந்துக் கட்ட ணம் போன்றவை உயர்வால் மக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர். எனவே, மாற்றம் வேண்டும் என்று திமு கவை நாடியுள்ளனர். நீலகிரியில் 110 விதியின் கீழ் ஜெயலலிதா ரூ.7,000 கோடியில் 2,000 மெகாவாட், சில்லல்லா மின் உற்பத்தி திட்டம் செயல்படுத்தப் படும் என்றார். இதுவரை எந்தப் பணியும் நடக்கவில்லை.
நீலகிரி மக்கள் மீது திமுக மிகுந்த அக்கறை கொண்டுள்ள தால், தேர்தல் அறிக்கையில், நீலகிரி மக்களுக்கு அதிக முக்கி யத்துவம் கொடுக்கப் பட்டுள்ளது. மனித விலங்கு மோதல்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். வன விலங்குகளால் பாதிக்கப் படுபவர்களுக்கு தற்போது வழங்கப்படும் இழப்பீடு ரூ.3 லட்சத்திலிருந்து ரூ.6 லட்ச மாக உயர்த்தி தரப்படும். கூடலூரில் சேரம்பாடி தோட்ட மருத்துவமனை 24 மணி நேரம் செயல்படும் வகையில் தரம் உயர்த்தி நவீனப்படுத்தப்படும். குன்னூரில் அரசு பொறியியல் கல்லூரி, உதகையில் மருத்துவ கல்லூரி, கோத்திகிரியில் அரசு கலைக் கல்லூரி அமைக்கப்படும்.
உதகையை சர்வதேச சுற்றுலா தலமாக தரம் உயர்த்தி, பார்க்கிங் வசதி ஏற்படுத்தப் படும். இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்க தொழில் நுட்ப பூங்கா அமைக்கப்படும்.
எம்எல்ஏக்களுக்கு எச்சரிக்கை
திமுக ஆட்சியில் அமைச்சர் மற்றும் எம்எல்ஏக்கள் 3 மாதங் களுக்கு ஒரு முறை சிறப்பு முகாம் நடத்தி மக்களின் குறை களை கேட்க வேண்டும். எம்எல் ஏக்கள் மக்களை நாட வேண் டும். மக்களை சந்திக்காத எம்எல்ஏக்கள் மீது தலைமை நடவடிக்கை எடுக்கும். கடந்த ஐந்தாண்டுகளில் தமிழக சட்டப் பேரவை ஜெயலலிதாவின் ஜால்ரா மன்றமாக மாறியிருந்தது. அமைச்சர்கள் தட்டித் தட்டி அங்குள்ள மேஜைகளில் விரிசல் ஏற்பட்டுவிட்டது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மேஜைகள் மாற்றப்படும் என்றார்.