Published : 25 May 2022 06:17 AM
Last Updated : 25 May 2022 06:17 AM

மதம் தொடர்பாக அவதூறு பரப்பும் யூ-டியூப் தளங்கள் மீது நடவடிக்கை - தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கோரிக்கை

சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை, த.மா.கா தலைவர் ஜி.கே. வாசன் எம்.பி. மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

சென்னை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நேற்று வெளியிட்ட அறிக்கை: சிதம்பரம் நடராஜர், தில்லை காளி குறித்து அவதூறான செய்தி யூ-டியூப் தளத்தில் வெளிவந்திருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் உலகப் பிரசித்தி பெற்ற நடராஜர் கோயில் அமைந்துள்ளது.

இக்கோயில் நடராஜப் பெருமானையும், தில்லை காளியம்மனையும் பற்றி தவறான செய்தியை யூ-டியூப் சேனலில் பரப்பி வருவது ஏற்புடையதல்ல. இது சம்பந்தமாக சிவனடியார்கள் விடுத்த கோரிக்கையை தமிழக அரசு ஏற்றுக் கொண்டு நிறைவேற்ற வேண்டும்.

இறை வழிபாடு மற்றும் மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் எவர் செயல்பட்டாலும் அவரை சட்டத்துக்கு உட்பட்டு கடுமையாகத் தண்டிக்க வேண்டும்.

கடுமையான தண்டனை

மேலும் இதுபோல யூ-டியூப்தளத்தில் எந்த மதம் சம்பந்தமாகவும் அவதூறான செய்திகள், பிரச்சாரங்கள் வெளிவராமல், பரவாமல் இருக்க உரிய நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுக்க வேண்டும். அதை மீறுவோர் மீது கடுமையான தண்டனை விதிக்க வேண்டும். இவ்வாறு ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x