எஸ்.ஐ.யின் ஏடிஎம் கார்டை எடுத்து ரூ.40 ஆயிரம் திருட்டு

எஸ்.ஐ.யின் ஏடிஎம் கார்டை எடுத்து ரூ.40 ஆயிரம் திருட்டு
Updated on
1 min read

காவல் உதவி ஆய்வாளரின் ஏடிஎம் கார்டை எடுத்து ரூ.40 ஆயிரம் பணத்தை திருடிவிட்டனர்.

சென்னை பல்கலைக்கழக அரங்கில் முதல்வர் ஜெயலலிதா பதவியேற்பு விழா நேற்று நடந்தது. ஆயிரக்கணக்கான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சென்னை மாதவரம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் தனபால் (55) . இவரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் இரவு தனது சட்டையை கழற்றி வைத்துவிட்டு சற்று நேரம் ஓய்வெடுத்தார். அப்போது, அவரது செல்போனுக்கு வந்த எஸ்எம்எஸ்ஸில், அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.40 ஆயிரம் பணம் எடுக்கப்பட்டதாக இருந்தது.

அதிர்ச்சி அடைந்த தனபால் சட்டைப் பையில் இருந்த ஏடிஎம் கார்டை தேடி பார்த்தபோது அது காணவில்லை என்பது தெரிந்தது. ஏடிஎம் கார்டின் பின்புறம் அதன் ரகசிய குறியீட்டு எண்ணையும் தனபால் எழுதி வைத்திருந்திருக்கிறார். இதனால் கார்டை எடுத்த நபர் ரகசிய குறியீட்டை பயன்படுத்தி பணத்தை திருடியிருக்கிறார். இதுகுறித்து அண்ணா சதுக்கம் காவல் நிலையத்தில் தனபால் புகார் கொடுத்திருக்கிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in