

நரிக்குறவர், குருவிக்காரர், மலையாளி கவுண்டர் இன மக்களை பழங்குடியினர் பிரிவில் சேர்ப்பதற்கான சட்டத்திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததற்கு தமிழக அரசியல் தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக தலைவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கருணாநிதி (திமுக தலைவர்)
நரிக்குறவர், குருவிக்காரர், மலையாளி கவுண்டர் ஆகிய வகுப்பினரை, பழங்குடியினர் பட்டியலில் (எஸ்டி) சேர்க்கும் வகையிலான சட்டத் திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச் சரவை ஒப்புதல் அளித்துள்ளது வரவேற்கத்தக்கது. திருச்சி மாவட்டம் - தேவராய நேரியில் நரிக்குறவர்கள் வசிப்பதற்காக 1970-ம் ஆண்டிலேயே திமுக அரசு தனியாக குடியிருப்புகளை கட்டிக் கொடுத்தது. 2008-2009-ல் திமுக அரசால் நரிக்குறவர் நல வாரியம் அமைக்கப்பட்டு, நிதியுதவிகள் வழங்கப்பட்டன.
நரிக்குறவர்களை எஸ்.டி. பட்டியலில் சேர்க்க வலியுறுத்தி மத்திய அமைச்சராக இருந்த வி.கிஷோர் சந்திர டியோவுக்கு நானே கடந்த 11.08.2013 அன்று கடிதம் எழுதியிருந்தேன். இது தொடர்பாக திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா மாநிலங்களவையில் கடந்தாண்டு உரையாற்றினார். இந்நிலையில், மத்திய அமைச்சரவை தற்போது எடுத்துள்ள முடிவு மகிழ்ச்சியைத் தருகின்றது. இதனை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்.
விஜயகாந்த் (தேமுதிக தலைவர்)
நரிக்குறவர்கள், குருவிக்கா ரர்கள், மலையாள கவுண்டர் கள் இனத்தை பழங்குடியினர் இனத்தில் சேர்க்க நடவடிக்கை எடுத்த மத்திய அரசுக்கும், பிர தமர் நரேந்திர மோடிக்கும் நன்றி. அந்த இன மக்களின் வாழ்க்கைத் தரம் உயர தேமுதிகவின் மக்களுக் காக மக்கள் பணி நிகழ்ச்சிகளில் நிறைய உதவிகளை செய்துள் ளோம். அவர்களின் வளர்ச்சிக்கு தேமுதிக என்றும் துணை நிற்கும். மேலும், குரும்பர்கள், இருளர்கள் மற்றும் பிற பிரிவினர் தங்களுக்கு சாதி சான்றிதழ் வழங்குவதோடு, எஸ்டி பிரிவில் சேர்க்க வலியுறுத்தி வருகின்றனர். அவர்களுக்கு சாதி சான்றிதழ் வழங்கி, அனைத்து சலுகைகளும் கிடைத்திட ஏற்பாடு செய்யவேண்டும்.
ஜி.கே.வாசன் (தமாகா தலைவர்)
நரிக்குறவர்கள் இனத்தை பழங்குடியினர் (எஸ்டி) பிரிவில் சேர்க்க வேண்டும் என்று தமாகா தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. இந்தக் கோரிக்கையை மத்திய அமைச்சகம் 2014-ம் ஆண்டே ஏற்றாலும், சட்ட வடிவம் கொடுக்க வில்லை. இந்நிலையில், அதற்கு சட்ட வடிவம் கொடுக்க மத்திய அமைச்சரவை தற்போது ஒப்பு தல் வழங்கியுள்ளது. இது அந்த சமுதாய மக்களின் தொடர் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி யாகும். இந்த சட்டம் நிறைவேற அனைத்துக் கட்சிகளும் ஒப்புதல் வழங்க வேண்டும்.
கி.வீரமணி (திராவிடர் கழகத் தலைவர்)
நரிக்குறவர்களையும், மலைப் பகுதிகளில் வாழும் மலையாளி கவுண்டர் (கேரளத்தவர்கள் அல்ல), குருவிக்காரர்களையும், புதுவை மாநிலத்தில் வில்லி, வேட் டைக்காரன் ஆகிய பிரிவினரை யும் பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதற்கான சட்டத்திருத்தத்தை நிறைவேற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதனால், அந்த சமூக மக்களுக் கும் சமூக நீதி அடிப்படையில் கல்வி, வேலைவாய்ப்புகள் கிடைக்கும். இந்த கோரிக்கையை பல முறை வலியுறுத்திய திமுக தலைவர் கருணாநிதிக்கும், மாநிலங்களவையில் பேசிய திருச்சி சிவா எம்.பி.க்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.