

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், அனந்தபுரம் அருகே புதுப்பேட்டை பகுதியில் திமுகநிர்வாகி வெங்கடேசன் உடல்நலக்குறை வால் பாதிக்கப்பட்டி ருந்தார். அவர், தனது இல்லத்தில் இருந்தபடி சிகிச்சை பெற்று வருகிறார். இதை அறிந்த சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் மஸ்தான் அந்த நிர்வாகியை பார்க்க நேற்று காரில் சென்றார். அனந்தபுரம் வரை காரில் சென்ற அமைச்சர், அங்கிருந்து குறிப்பிட்ட இடத்திற்கு செல்லும சாலை குறுகலாக இருப்பதால் காரில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், அமைச்சர் செல்லும் வகையில் ஆட்டோ ஒன்று வரவழைக்கப்பட்டது.
ஆட்டோவில் ஏறிய அமைச்சர், டிரைவருக்கு அருகே அமர்ந்து கொள்ள, பின் இருக்கையில் அவருடன் வந்த திமுகவினர் மற்றும் பாதுகாவலர் அமர்ந்து வந்தனர். அமைச்சர் மஸ்தான் ஆட்டோவில் வரும் படம் சமூக வலைதளங்களில் பரவியது. ஒரு சிலர், அமைச்சரின் எளிமைய வரவேற்று பதிவிட்டாலும், பலர் டிரைவர் இருக்கையில் அமர்ந்து இப்படிச் செல்வது மோட்டார் வாகன சட்டப்படி தவறானது என்பதை சுட்டிக் காட்டி விமர்சித்திருந்தனர். இதுகுறித்து அமைச்சரிடம் கேட்டதற்கு, ‘வருங்காலங்களில் இதுபோல் நடக்காமல் பார்த்து கொள்கிறேன்’ என்றார்.