

தமிழகத்தில் அதிமுக மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ள போதிலும், சென்னையில் போட்டியிட்ட அக்கட்சியின் அமைச்சர்கள் வளர்மதி, கோகுலா இந்திரா ஆகிய இருவரும் தோல்வி யடைந்தனர்.
சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் அமைச்சர் வளர்மதி 2-வது முறையாக போட்டியிட்டார். அவரை எதிர்த்து திமுக சார்பில் கு.க.செல்வம் நிறுத்தப்பட் டார். நேற்று நடைபெற்ற வாக்கு எண்ணிக் கையின்போது முதல் சுற்றில் இருந்தே திமுக வேட்பாளர் செல்வம் முன்னணியில் இருந்தார். ஓட்டு எண்ணிக்கை முடிந்ததும் செல்வத்துக்கு 61 ஆயிரத்து 726 வாக்குகள் கிடைத்தன. அதிமுக வேட்பாளர் வளர்ம திக்கு 52 ஆயிரத்து 897 ஓட்டுகள் கிடைத் தன. இதன் மூலம், அமைச்சர் வளர் மதியை விட 8 ஆயிரத்து 829 வாக்குகள் கூடுதலாகப் பெற்று செல்வம் வெற்றி பெற்றார்.
சென்னை அண்ணாநகர் தொகுதியில் அதிமுக சார்பில் அமைச்சர் கோகுல இந்திரா 2-வது முறையாக போட்டியிட்டார். இவரை எதிர்த்து திமுக சார்பில் எம்.கே.மோகனும், மதிமுக சார்பில் மல்லிகா தயாளனும், பாஜக சார்பில் கே.சுரேஷும் போட்டியிட்டனர்.
வாக்கு எண்ணிக்கை தொடங்கிய முதல் சுற்றில் இருந்தே கோகுல இந்திராவுக்கு பின்னடைவு ஏற்பட்டது. ஒவ்வொரு சுற்றிலும் அவர் சராசரியாக 500 முதல் ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளரை விட பின்தங்கியிருந்தார். இறுதி சுற்றில் திமுக வேட்பாளர் எம்.கே.மோகனுக்கு 72 ஆயிரத்து 207 வாக்குகளும், கோகுல இந்திராவுக்கு 70 ஆயிரத்து 520 வாக்குகளும் கிடைத்தன. இதன் மூலம் கோகுல இந்திரா ஆயிரத்து 687 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
கடந்த 2011-ம் ஆண்டு தேர்தலில் கோகுல இந்திரா இதே அண்ணாநகர் தொகுதியில் 36 ஆயிரத்து 590 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.