Published : 13 May 2016 08:43 AM
Last Updated : 13 May 2016 08:43 AM

கைப்பற்றப்பட்டதே ரூ.100 கோடி என்றால் தமிழகத்தில் ரூ.1,000 கோடி வரை பட்டுவாடா: பிரகாஷ் ஜவடேகர் சந்தேகம்

மத்திய வனம் மற்றும் சுற்றுச் சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், சென்னையில் நிருபர் களிடம் நேற்று கூறியதாவது:

தமிழகத்தில் வசந்தம் வீசுகிறது என்று முதல்வர் ஜெயலலிதா தனது பிரச்சாரத்தில் கூறியுள்ளார். மின்வெட்டு, ஊழல், முன்னேற் பாடுகள் இல்லாததால் ஏற்பட்ட வெள்ளம், ஏழ்மை, வளர்ச்சி யின்மை, விவசாயிகளுக்கு பாசன வசதி வழங்காதது, மத்திய அரசின் மக்கள் நலத் திட்டங் களுக்கு ஒத்துழைப்பு தராதது என அதிமுக அரசு பற்றி சொல்லிக் கொண்டே போகலாம். இதற்கு பேர்தான் வசந்தமா? திமுக, அதிமுகவை தமிழக மக்கள் தண்டிக்க வேண்டும்.

கடந்த தேர்தல்களின்போது சென்னையில் ஒரே ஒருநாள் மட்டும் பிரச்சாரம் செய்த ஜெயலலிதா, தற்போது 3 நாட்கள் பிரச்சாரம் செய்கிறார். அவருக்கு பயம் வந்ததுதான் இதற்கு காரணம். எந்த ஜனநாயக நாட்டிலும் இல்லாத அளவுக்கு ஒரு மாநிலத் தேர்தலில் ரூ.100 கோடி பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்டதே இவ்வளவு என்றால், எப்படியும் ரூ.1,000 கோடி வரை பணம் விநியோகம் செய்திருப்பார்கள்.

தமிழகத்தில் மாற்றத்துக்கான நேரம் இது என்பதை மக்கள் உணர வேண்டும். காங்கிரஸுடன் கூட்டணி அமைத்துள்ள திமுக வையும், மக்களுக்கு நல்லது செய்யாத அதிமுகவையும் மக்கள் புறக்கணிக்க வேண்டும். பிரதமர் மோடியின் பிரச்சாரம் தமிழக மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

இவ்வாறு பிரகாஷ் ஜவடேகர் கூறினார். பேட்டியின்போது பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உடனிருந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x