

செங்கல்பட்டு, மறைமலைநகர் மற்றும் கூடுவாஞ்சேரி ஆகிய பகுதிகளில் பாதாள சாக்கடை பிரச்சினையை முன்னிறுத்தி பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் செங்கல்பட்டு தொகுதியில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
செங்கல்பட்டு சட்டப்பேரவைத் தொகுதி காஞ்சிபுரம் மாவட்டத்தின் மத்திய பகுதியாக விளங்குகிறது. 3 லட்சத்து 71 ஆயிரத்து 58 வாக் காளர்கள் உள்ளனர். இங்கு, அதிமுக சார்பில் கமலகண்ணன், திமுக சார்பில் வரலட்சுமி, தேமுதிக சார்பில் அனகை முருகேசன், பாமக சார்பில் திருக்கச்சூர் ஆறுமுகம் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.
மறைமலைநகர் பகுதியில் நேற்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட திமுக வேட்பாளர் வரலட்சுமி கூறிய தாவது: செங்கல்பட்டு, மறைமலை நகர் ஆகிய நகராட்சிகள் வேக மாக வளர்ந்து வருகின்றன. குடியிருப்புகளுக்கு பாதாள சாக்கடை இணைப்பு இல்லாமல் உள்ளது. இதனால், நகரப் பகுதி யில் எங்கு பார்த்தாலும் சாக்கடை யாக உள்ளது. நாங்கள் வெற்றி பெற்றால் பாதாள சாக்கடை பிரச் னைக்கு தீர்வு காணப்படும். நந்தி வரம் கூடுவாஞ்சேரி பேரூராட்சியி லும் பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வரப்படும்.
செங்கல்பட்டில் அரசு பொறியி யல் கல்லூரி அமைக்க முயற்சி மேற்கொள்ளப்படும். செங்கல்பட் டுக்கு எய்ம்ஸ் மருத்துவமனையை கொண்டு வர மத்திய அரசுக்கு அழுத் தம் தரப்படும் என்று கூறினார்.
துணைநகரம் அமைப்போம்
இதேபோன்று கூடுவாஞ்சேரி யில் வாக்கு சேகரித்த அதிமுக வேட் பாளர் கமலகண்ணன், ‘செங்கல் பட்டு மற்றும் கூடுவாஞ்சேரி பகுதி யில் பாதாள சாக்கடை திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற நட வடிக்கை எடுக்கப்படும். செங்கல் பட்டு மருத்துவமனையை மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை யாக மாற்ற முயற்சி மேற்கொள் ளப்படும்.
வண்டலூர் பகுதியில் துணை நகரம் அமைப்பதற்கான முயற்சி களை தீவிரப்படுத்துவோம். அதிமுக தேர்தல் அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ள அத்தனை அம்சங்களையும், செங்கல்பட்டில் நிறைவேற்ற நடவடிக்கை எடுப் பேன்’ என்று உறுதியளித்தார்.
காட்டாங்கொளத்தூர் ஒன்றியத் தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டி ருந்த தேமுதிக வேட்பாளர் அனகை முருகேசன், ‘செங்கல்பட்டில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில் சுரங்கப்பாதை அமைக் கப்படும். நீண்ட கால கோரிக்கை யான பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்ற நடவடிக்கை எடுக் கப்படும். செங்கல்பட்டு நகரம் விரி வாக்கம் செய்யப்பட்டு நகராட்சி வருவாயை உயர்த்தி அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்படும்’ என்று வாக்குறுதி அளித்து பிரச் சாரம் மேற்கொண்டார்.
மறைமலைநகர் பகுதியில் வாக்கு சேகரித்த பாமக வேட்பா ளர் திருக்கச்சூர் ஆறுமுகம், ‘நெடுஞ் சாலையோரம் அமைக்கப்பட்ட மதுபான கடைகளை அகற்ற பாமக கடுமையாக போராட்டம் நடத்தி வெற்றி கண்டுள்ளது. மறை மலைநகரில் பாதாள சாக்கடை திட்டத்தை விரிவுபடுத்த துரித நடவடிக்கை எடுக்கப்படும். செங் கல்பட்டு நகராட்சியின் எல்லை களை விரிவுபடுத்தி அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும். கொளவாய் ஏரியை தூர்வாரி, சுற் றுலா பகுதியாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.