Published : 24 May 2022 06:58 AM
Last Updated : 24 May 2022 06:58 AM

பிச்சையெடுத்த பணத்தை ஆம்புலன்ஸில் தவறவிட்ட மூதாட்டி: பணத்தை ஒப்படைத்த ஊழியருக்கு பாராட்டு

செங்கல்பட்டு: பிச்சையெடுத்து சேர்த்து வைத்த ரூ.71ஆயிரத்தை ஆம்புலன்ஸில் மூதாட்டி ஒருவர் தவறவிட்டார். இதை கவனித்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர் மூதாட்டியிடம் ஒப்படைத்தார். ஊழியர்களின் நோ்மையை பொதுமக்கள், மருத்துவர்கள், சமூக ஆா்வலா்கள் பாராட்டினா்.

செங்கல்பட்டு மாவட்டம், செம்மஞ்சேரி பகுதியில் சாலையோரமாக யாசகம் கேட்டு பிழைப்பு நடத்தி வந்த அமுதா என்கிற மூதாட்டி மயங்கிக் கிடந்துள்ளார்.

அப்பகுதியைச் சேர்ந்த சிலர் அவரை மீட்டு குரோம்பேட்டை மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அமுதா மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டார். இந்த வாகனத்தில் ஓட்டுநர் அன்புராஜ், மருத்துவ உதவியாளர் மணிகண்டன் ஆகியோர் இருந்தனர்.

வரும் வழியில் மூதாட்டி அமுதா வைத்திருந்த பையில் இருந்த பணப்பை தவறி கீழே விழுந்துள்ளது. இதனைக் கண்ட மருத்துவ உதவியாளர் மணிகண்டன் அந்தப் பையை எடுத்து வைத்திருந்து, மூதாட்டி அமுதா மயக்கம் தெளிந்த பின் அவரிடம் பத்திரமாக ஒப்படைத்தார். அந்தப் பையில் ரூ.71,426 பணம் இருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x