சிவகங்கை | ஆட்சியர் அலுவலகத்தில் சக்கர நாற்காலி இல்லாததால் மாற்றுத் திறனாளிகள் சிரமம்

சிவகங்கை | ஆட்சியர் அலுவலகத்தில் சக்கர நாற்காலி இல்லாததால் மாற்றுத் திறனாளிகள் சிரமம்
Updated on
1 min read

சிவகங்கை: சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சக்கர நாற்காலி இல்லாததால் மனு அளிக்க வரும் மாற்றுத் திறனாளிகள் சிரமப்படுகின்றனர்.

மாற்றுத் திறனாளிகளில் கால் ஊனமுற்றோர், மனநிலை பாதிக்கப்பட்டோர் சிரமம் இன்றி வந்து செல்வதற்கு அரசு அலுவலகங்களில் சாய்தளம் அமைக்கவும், சக்கர நாற்காலிகள் ஏற்பாடு செய்து கொடுக்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு மக்கள் குறைதீர் கூட்டத்துக்கு மனு அளிக்க வரும் மாற்றுத் திறனாளிகளுக்கு சாய்தள வசதி இருந்தாலும், சக்கர நாற்காலி வசதி இல்லை.

இதனால் மாற்றுத் திறனாளிகள் தவழ்ந்து செல்லும்நிலை உள்ளது. எனவே ஆட்சியர் அலுவலகத்தில் சக்கர நாற்காலி வசதி செய்து கொடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in