

காந்தியவாதி சசிபெருமாள் இறந்த போது மதுக்கடைகளை மூடுவேன் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவிக்காதது என்று நடிகர் வாசு விக்ரம் கேள்வி எழுப்பினார்.
திருவண்ணாமலை சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளர் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவை ஆதரித்து நடிகர் வாசுவிக்ரம் நேற்று முன்தினம் இரவு பிரச்சாரம் செய்தார்.
அப்போது அவர் பேசும்போது, “தமிழகத்தில் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பிறகு எந்த திட்டங்களும் நடைபெறவில்லை. அப்படியே வந்தாலும், விதி எண் 110-ன் கீழ் செயல்படாத திட்டங் களை அறிவித்து, மக்களை ஏமாற்றினார். மதுக்கடைகளை படிப் படியாக மூடுவேன் என்று கூறு கிறார். காந்தியவாதி சசிபெருமாள் மரணத்தின்போது ஏன் அறிவிக்க வில்லை. மக்களை ஏமாற்றி வாக்குகளைப் பெறவேண்டும் என்பதற்காக, மதுக்கடைகளை படிப்படியாக மூடுவேன் என்கிறார். ஜெயலலிதா ஆட்சியில் பால் விலையை 2 முறை உயர்த்தப் பட்டது. தனியாரிடம் அதிக விலை கொடுத்து மின்சாரத்தை வாங்கி தமிழகத்தை மின் மிகை மாநிலமாக மாற்றியதாகக் கூறுகிறார்.
திமுக தேர்தல் அறிக்கையில் மாதம் ஒரு முறை மின் கட்டணம் செலுத்தும் திட்டம் கொண்டு வரப்படும் என்று கருணாநிதி அறிவித்துள்ளார். அதன்மூலம் மக்கள் செலுத்தி வரும் மின் கட்டணம் வெகுவாக குறையும். தமிழக அமைச்சர்களை மாற்றியது போலவே, வேட்பாளர்களையும் ஜெயலலிதா மாற்றி வருகிறார் என்றார்.