

பிளஸ் 2 தேர்வு எழுதிய சிறைவாசி களில் மாநில அளவில் முதலிடம் பெற்ற பாளையங்கோட்டை மத்திய சிறை ஆயுள் தண்டனை கைதி பாபநாசம் (41) பிபிஏ படிக்க விருப்பம் தெரிவித்துள்ளார்.
கடந்த 2014-ம் ஆண்டில் சிறையில் இருந்து படித்து எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதி 417 மதிப்பெண் பாபநாசம் பெற்று, மாநில அளவில் அத்தேர்வு எழுதிய சிறை கைதிகளில் முதலிடம் பெற்றிருந்தார்.
அதேபோன்று தற்போது பிளஸ் 2 தேர்வில் 1,084 மதிப்பெண் பெற்று, சிறை கைதிகளிடையே மாநில அளவில் முதலிடத்தை பெற்றுள்ளார்.