“ஆஷாக்களை உருவாக்கியவன் என்ற முறையில் எனக்குப் பெருமிதம்” - அன்புமணி

“ஆஷாக்களை உருவாக்கியவன் என்ற முறையில் எனக்குப் பெருமிதம்” - அன்புமணி
Updated on
1 min read

சென்னை: “கரோனா ஒழிப்புக்காக WHO விருது வென்றுள்ள ஆஷாக்கள் இந்தியாவின் பெருமை. அவர்களை உருவாக்கியவன் என்ற முறையில் அவர்கள் எனது பெருமிதம்” என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் அடுத்தடுத்து வெளியிட்டுள்ள பதிவுகளில், ''உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை இயக்குனர் அறிவித்துள்ள '6 உலக சுகாதார தலைவர்கள்' விருதுகளில் ஒன்று இந்தியாவின் அங்கீகரிக்கப்பட்ட சுகாதார பணியாளர்களான ஆஷாக்களுக்கு (ASHA) கிடைத்திருக்கிறது. இந்த அறிவிப்பு மிகுந்த மகிழ்ச்சியும், மன நிறைவும் அளிக்கிறது.

இந்தியாவில் கரோனாவைக் கட்டுப்படுத்தியவர்களில் ஆஷாக்களின் பங்கு முக்கியமானது. உலகமே கரோனாவைக் கண்டு அஞ்சிய நிலையில், ஆஷாக்கள் தான் வீடு வீடாக சென்று சோதனை நடத்தி பாதிக்கப்பட்டவர்களைக் கண்டுபிடித்து சிகிச்சையளித்தனர். அதுதான் கரோனாவை ஒழித்தது.

கிராமப்புற மக்களுக்கும் மருத்துவ சேவை கிடைக்க வேண்டும் என்பதற்காக நான் மத்திய சுகாதார அமைச்சராக இருந்த போதுதான் ஆஷாக்கள் திட்டம் உருவாக்கப்பட்டது. எனது காலத்தில் தான் 8.06 லட்சம் ஆஷாக்கள் நியமிக்கப்பட்டனர். அவர்களின் கரோனா ஒழிப்பு பணிக்காகத்தான் இந்த விருது.

கரோனா ஒழிப்புக்காக WHO விருது வென்றுள்ள ஆஷாக்கள் இந்தியாவின் பெருமை. அவர்களை உருவாக்கியவன் என்ற முறையில் அவர்கள் எனது பெருமிதம். சாதனை படைத்த 10 லட்சம் ஆஷாக்களுக்கும் எனது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்'' என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in