மே 28-ல் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

மே 28-ல் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
Updated on
1 min read

சென்னை: 28ம் தேதி திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மாவட்டக் கழகச் செயலாளர், பொறுப்பாளர்கள்கள் கூட்டம் வருகிற 28ம் தேதி சனிக்கிழமை காலை 10.30 மணி அளவில், சென்னை, அண்ணா அறிவாலயம், "கலைஞர் அரங்கத்தில்" நடைபெறும்.

அதுபோது மாவட்டக் கழகச் செயலாளர் மற்றும் பொறுப்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார். இந்தக் கூட்டத்தில் முன்னாள் திமுக தலைவர் கருணாநிதியின் 99-வது பிறந்தநாள் குறித்து ஆலோனை நடத்தப்படவுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in