Published : 19 May 2016 10:59 AM
Last Updated : 19 May 2016 10:59 AM

புதுச்சேரியில் காங்கிரஸ் முன்னிலை - 5 இடங்களில் வெற்றி; என்.ஆர்.காங்கிரஸ் 2-ல் வெற்றி

புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி 5 இடங்களிலும், என்.ஆர்.காங்கிரஸ் 2 இடங்களிலும் வென்றுள்ளது.

புதுச்சேரியில் 30 தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் புதுச்சேரியில் 5 மையங்களில் பணிகள் நடந்து வருகிறது.

காங்கிரஸ் கட்சியில் நெல்லித்தோப்பு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமார் 18506 வாக்குகள் பெற்று வென்றார். அதிமுக வேட்பாளர் ஓம்சக்தி சேகர் 6365 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பெற்றனர். வித்தியாசம் 12141 வாக்குகள்.

ஏனாம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மல்லாடி கிருஷ்ணராவ் 20801 வாக்குகள் பெற்று வென்றார். 2ம் இடத்தில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் பைரவசாமி 12047 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.

ஏம்பலத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கந்தசாமி 18945 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இரண்டாவது இடம் பெற்ற என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் லட்சுமிகாந்தன் 7745 வாக்குகள் பெற்றார். வித்தியாசம் 11200.

லாஸ்பேட்டையில் காங்கிரஸ் வேட்பாளர் சிவகொழுந்து 12144 வாக்குகள் பெற்று வென்றார். சுயேச்சை வேட்பாளர் வைத்தியநாதன் 2ம் இடம் பிடித்தார். இவர் 5695 வாக்குகள் எடுத்தார். வித்தியாசம் 6449. என்.ஆர்.காங்கிரஸ் நந்தா சரவணன் 4066 வாக்குகளுடன் 3ம் இடம் பிடித்தார். பாஜக மாநிலத்தலைவர் சாமிநாதன் 1509 வாக்குகளுடன் 4ம் இடத்துக்கு வந்தார்.

காமராஜர் நகரில் எதிர்க்கட்சித்தலைவர் காங்கிரஸ் கட்சி வைத்திலிங்கம் 11618 வாக்குகள் பெற்று வென்றார்.அதிமுக வேட்பாளர் கணேசன் 6512 வாக்குகள் பெற்று 2ம் இடம் பிடித்தார். வித்தியாசயம் 3642.

என்.ஆர்.காங்கிரஸ் வெற்றி: புதுச்சேரியில் கதிர்காமம் தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் ஜெயபால் 11690 வாக்குகள் பெற்று வென்றார். 2வதாக சுயேச்சை வேட்பாளர் ரமேஷ் 7888 வாக்குகள் பெற்றார். இருவருக்கும் இடையே 3802 வாக்குகள் வித்தியாசம் இருந்தது. காங்கிரஸ் வேட்பாளர் சிவசண்முகம் 2601 வாக்குகள் பெற்று 3ம் இடம் பிடித்தார்.

காரைக்கால் வடக்கில் என்.ஆர்காங்கிரஸ் திருமுருகன் 13139 வாக்குகள் பெற்று வென்றார். அதிமுக வேட்பாளர்கள் ஓமலிங்கம் 9841 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். 3298 வித்தியாசம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x