கருத்துக் கணிப்புகளை நிராகரிக்க வேண்டும்: பி.எஸ்.ஞானதேசிகன் வலியுறுத்தல்

கருத்துக் கணிப்புகளை நிராகரிக்க வேண்டும்: பி.எஸ்.ஞானதேசிகன் வலியுறுத்தல்
Updated on
1 min read

தமாகா துணைத் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகள் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தேர்தலில் வாக்குகள் எண்ணப் படும்போதுதான் மக்களின் மனநிலை தெரியும். இவ்வாறு இருக்க, ஒவ்வொரு கருத்துக் கணிப்பும் வெவ்வேறு விதமான சதவீத கணக்கைப் போடுவதும், ஆளும் கட்சி, ஆண்ட கட்சிக்கு சாதகமாகவும், பாதகமாகவும் கருத்துக் கணிப்பு வெளியிடுவதும் தற்போது நடைபெற்று வருகிறது. பத்துக்கும் மேற்பட்ட கருத்துக் கணிப்புகள் ஒன்றோடு ஒன்று முரண்பட்டிருப்பது எப்படி எனத் தெரியவில்லை.

பிஹார் தேர்தலில் பாஜக மூன்றில் இரண்டு பங்கு இடங்களைப் பெற்று ஆட்சி அமைக்கும் என்றும், பஞ்சாபில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கும் என்றும் கருத்துக் கணிப்புகள் சொன்னது பொய்த்துப் போனது. எனவே, தமிழக வாக்காளர்கள் இந்த கருத்துக் கணிப்புகளை நிராகரிக்க வேண்டும் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in